பக்கம்:நாகப்பட்டினம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4名 நாகபட்டினம்

பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டளவில் நாகையில் எழுப்பப்பெற்ற நாகநாதர் கோயில் கல்வெட்டொன்றில் "நாகை" என்று குறிக்கப்பெற்றுள்ளது. தேவார மூவர் படைப்புகள் தொடங்கி, திருமங்கையாழ்வார் பாடலில், தொடர்ந்து இடையில் சில இலக்கி யங்களிலும், பிற்காலக் கவிஞன் காளமேகம், வருணகுலாதித்தன் மடல் ஆசிரியை கவித்திருமதி காளிமுத்து அம்மையார் என்றெல்லாம் பிற்காலப் புலவர்கள் வரை நாகை கடல்நாகை" என்றெல்லாம் பாடப்பட்டுள்ளது. நம்காலப் பெரும்புலவராகிய "தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரும் தம் முற்பருவத்தில் நாகை வேதாசலம் பிள்ளை என்றுதான் எழுதினார். இங்கேயும் பெயர் பெற்ற நாகை என்று பெயர் சொல்ல நேர்ந்துள்ளது.

இப்பெயர்பெற்ற நாகையை - நாகர்பட்டினத்தை அனைவரும் நாகபட்டினம் என்றே குறிக்க இந்நூல் நாகர்பட்டினம் என்று பதிந்து வருவதற்குரிய காரணத்தை நிறைவாக விளக்கினால்தான் பெயர் பெற்ற நாகை பெற்ற உண்மைப் பெயர் நிலைத்துப் பதியப் பெற்றதாகும். நாகர் - பட்டினம்

நாகர்பட்டினம், நாகர்' என்னும் அடைமொழியுடன் பட்டின மாக நிற்கிறது. பட்டினம் என்பதற்குச் சான்றுகளோ, விளக் கங்களோ எழுத வேண்டியதில்லை. இஃது அறிவறிந்த உண்மை.

நாகர் என்பதுதான் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட வேண்டியதாகின்றது. நூலின் தோற்றுவாயில் நாகர் வருகையால், குடியேற்றத்தால், குடியமர்வால் - இவ்வடைமொழி பொருத்த மானதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாகர்நாடு, நாகர், அன்னார் இந்தியாவில் இடம்பெற்றமை, நாகை அன்னாரால் பெயர்பெற்றமை ஆகியன சற்று விரிவாக - தக்க சான்றுகளுடன் காணப்பட வேண்டும், .

நாகர்நாடு நக்கவாரம் - நிக்கோபார் என்று உலக அளவில் குறிக்கப்படுவது. இது வங்காள விரிகுடாக் கடலில் உள்ள 18 தீவுகளின் கூட்டம் நம் இந்திய அரசின் பிடியில் உள்ளது. பழங்கால வரலாறு கொண்டது.தமிழ் இலக்கியங்களில் மணிமேகலையில் இது “நாகநாடு என்றே குறிக்கப்படுகிறது. மலைகள் நிறைந்த நாடு. தமிழ்க் கல்வெட்டுகளில் மாந்க்கவாரம் என்று மெய்க் கீர்த்தியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/64&oldid=584946" இலிருந்து மீள்விக்கப்பட்டது