பக்கம்:நாகப்பட்டினம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாகபட்டினம்

பழம்பெயர் கோட்டாறு. இங்கும் நாகநாதர் கோயில் உண்டு. இரட்டைப்பாம்பு உருவம் மட்டுமே மூலவராக உள்ளது.

தொன்மையில் பாம்புக் கோயில் இல்லை. சிலப்பதிகாரத்தில் "வெள்ளை நாகர்தம் கோட்டம்" என்று புகார்க் கோயில் ஏன் குறிக்கப்படுகிறது. அது பலராமன் கோயில். பலராமன் ஆதிசேடனின் தோற்றரவு என்று கதை இருப்பினும் பலராமனின் மாந்த வடிவமே உள்ளது. நாககன்னிகைச் சோழர்

இக்கோயில் நாகநாட்டு மக்களது புத்தமதத் தொடர்புள்ளதும், இலக்கியங்களில் பேசப்படுவதுமாகிய மணிபல்லவத் தீவு இலங்கைத் தீவுக் கூட்டங்களில் ஒன்று. இக்காலத்தில் இது நயினாத் தீவு எனப்படுகின்றது. இத்தீவில் உள்ள நாகபூசணியம்மன் கோயில் மூலவர் உருவம் பின்னிப்புணரும் இரட்டைப் பாம்புகளே. யான் இதனைக் கண்டுள்ளேன். -

நச்சினார்க்கினியர் " நாகப்பட்டினத்துச் சோழன்" என்று குறித்து, அவன் பிலத் துவாரத்தின் வழியே நாகலோகம் (கீழ் உலகம்) சென்று நாககன்னிகையைக் கூடி ஒரு மகனைப் பெற்று வந்தான். அவனே இளந்திரையன் என்று எழுதினார். இக்கதையே ஒரு மன்னன் பெயருடன் பெரும் மாற்றமின்றி ஒரு கதை எழுதப்பெற்றுள்ளது. -

"சூர ஆதித்த சோழன் என்பவன் சூளாமணிச் சோழன் வழிவந்தவன். திரிசிரமலைப் பகுதியில் தூய நீராட வந்த நாக கன்னிகையைத் தொடர்ந்து நாகலோகம் சென்று அங்கு காந்திமதி என்னும் வேறு நாககன்னிகையை மணம்புரிந்து அங்கிருந்து வெற்றிலையையும் செந்நெல்லையும், இலிங்கத்தையும் கொண்டு வந்து தமிழ் நிலத்தில் நட்டும் பெருக்கியும் நாட்டியும் வழிபட்டும் வந்தான்". (13)

இவ்வாறு கூறும் அபிதான சிந்தாமணிக் கதையில் நச்சினார்க்கினியர் குறித்த நாகபட்டினச் சோழன் பெயர் வெளியிட்ப்படுவதாக இருந்தாலும், நாககன்னிகையர் வேறுபடு கின்றனர். இது நாகர்பட்டினத்தில் தொடங்கியதாக இல்லை; திருச்சிராப்பள்ளியில் தொடங்குகிறது. திருச்சிராப்பள்ளி பழைய சோழர் தலைநகராம் உறையூர்க்கு அண்மையானது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/68&oldid=584950" இலிருந்து மீள்விக்கப்பட்டது