பக்கம்:நாகப்பட்டினம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியவன் உரை

5Tழுத்தாளன் உலகத்தை எழுத்தால் ஆள்கிறான். காலங்காலமாய் ஆள்கிறான். காலத்தையும் ஆள்கிறான். முற்கால எழுத்தாளன் கூர்ங் கல்லாலும், முள்ளாலும், மயில் இறகாலும், எழுத்தாணியாலும் ஆண் டான். பிற்கால எழுத்தாளன் எழுது கோலால் ஆள்கிறான். முன்னவன் எழுத்தானியே செங்கோலாக-ஆண்டான். பின்னவன் எழுதுகோல் முனையே செங்கோலாகவும், போர்க்கருவியாகவும் கொண்டுள்ளான். - தமிழ் வளாக எழுத்தாளனுக்குப் புலமைதான் உந்து முனை. இலக்கியத்தையும் இலக்கணத்தையும் படைத்த அவன் அவற்றில் வரலாற்றையும், வாழ்வியலையும், நிலவியலையும், வானவியலையும் பொதிந்து வைத்தான். அந்நாள் எழுத்தாளர் மிகு எண்ணிக்கையர். அனைவரும் எழுத்தாளர்களே. எனினும் ஒரு புலவன் மட்டும் எழுத்தாளன்' என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

அவன் இயற்பொயர் பூதன், சேந்தன் அவன் தந்தை. அப்யன் பெய ரின் முன் எழுத்தை மட்டுமின்றி முழுப்பெயரையும் முன்னே கொண்டு சேந்தன் பூதன்' எனப் பெயர் பெற்றான். இத்துடன் எழுத்தாளன் என்னும் அடைமொழியும் பெற்றான். மதுரையில் வாழ்ந்த இவன் 'மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்' என்று முழுப்பெயர் கொண்டான். இங்கு எழுத்தாளன் என்றது மன்னனின் அரசுக் குறிப்புக்களையும், ஆணைகளையும் எழுதுபவன் என்னும் பொருள் கொண்டது. இவ்வகை யிலும் புலமைப் பாட்டு படைத்த வகையிலும் இவன் எழுத்தாளன்.

இவன் பாடல் ஒன்றே ஒன்று குறுந்தொகையில் உள்ளது. அத்ன் மூலம் காதல் கன்னி ஒருத்தியை நம்முன் நிறுத்தியுள்ளான்.

அவள் ஒரு கட்டழகன் காதலில் தோய்ந்தாள்; அவன் மனம் முடிக்காததால் தேய்ந்தாள்; உடல் ஒய்ந்தாள். என்றாலும் உள்ளம் சாய்ந் தாள் அல்லள். அவனை மணந்து கூடிக் களிப்பதில் உறுதியிருந்தது.

அவளை இங்கு காட்டுதற்குக் கரணியம் இந்நூலை எழுதியவன் என்னும் வகையில் யான் அவளாக ஆனேன் என்பதே.

அவள் அவனைக் காதலித்தாள். எனக்கும் அவ்வாறு ஒரு காதல். அவள் அவனைப் பற்றிய ஒவியத்தை உள்ளத்தில் தீட்டிக்கொண்டே வந்தாள். யானும் அவ்வாறே. என்றேனும் ஒரு நாள் அவனைக் கூடி அவனின் மன ஓவியத்தைக் கண்கூடாகும் உருவாக்கி, அணைக்கும் நோக் கத்தில் இருந்தாள். யானும் அவ்வாறே. அவள் தோழி அவனை ஒரு நாள் அவள் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உறுதிமொழி எடுக்கச் செய்தாள். அது போன்றே என் காதல் ஒவியத்தை என் அருமை நண்பர் பதிப்புச் செம்மல் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள் அவர் சொல்லால் என் முன் வைத்து நிறைவேற்றிக்கொள்ளச் சொன்னார். அக்காதல் வடிவந்தான் இவ்வரலாற்று நூலாக்கம். நாகர்பட்டின வரலாற்றை எழுத வேண்டும் என்ற உணர்வார்ந்த ஆர்வமே என் காதல் வடிவு. காதல் நிறை வேற உதவிய நண்பர் பதிப்புச் செம்மலுக்கு அச்சார நன்றி படைக் கின்றேன்.

31 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மாநில அஞ்சல் ஊழியர் மாநாட்டு அன்பர்கள் வேண்டியதற்கேற்ப நாகை நகர் வரலாற்றை ஒரு கட்டுரையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/7&oldid=584892" இலிருந்து மீள்விக்கப்பட்டது