பக்கம்:நாகப்பட்டினம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 53

மேலும் இவரிற் பலர் - மிகப்பலர் புத்தமதச் சார்பாளர்களாவர். சீனா - திபேத் வழி வந்த மொழி கொண்டவர். -

இதனை எழுதிக் கொண்டிருக்கும் நாளிலேயே ஒரு வன்முறை யான துப்பாக்கிச் சூட்டுச் செய்தி வந்துள்ளது. நாகரினத்து ஆதிக்குடியைச் சேர்ந்த இளம் வன்முறையாளர் மூலம் அம்மாநில (நாகாலாந்து) முன்னாள் முதலமைச்சரைப் புதுதில்லியில் அதிலும் நாகாலாந்து இல்லத்தில் வைத்தே சுட்டுள்ளனர் என்பதே அச்செய்தி. நாகாலாந்து

நாகர் குடியேற்றத்தால் வடகிழக்கு இந்தியாவில் அவரினப் பெயரில் ஒரு தனி நிலமே (Land) நாகாலாந்து என்று பெயர் பெற்றுள்ளதை இங்கே காணவேண்டும்.இந்த நாகாலாந்துநாகர்கள் ஆதிக்குடிகளாகவே நாகமலையில் இடம் பெற்றவராவர். . .

இது போன்றே இந்தியாவின், எல்லைப்பகுதியில் மட்டுமன்றி மையப்பகுதியிலும் நாகர் குடியேறினர். மராட்டிய மாநிலத்தில் பம்பாயின் வடகிழக்கில் நாகபுரி - நாக்பூர் என்றொரு நகர் உள்ளது. கீழை நாடான சாவக நாட்டின் தலைநகரத்தின் பெயரும் நாகபுரி என்பது இங்கு கருதத்தக்கது. -

"நாக புரமிது நன்னக ராள்வோன் - பூமிசந்திரன்மகன் புண்ணிய ராசன்"(14) என்று சாத்தனார் பாடியுள்ளார். மராட்டிய நாகபுரி ஒரு மாவட்டம். அங்கு மலைப் பகுதியிலும் குறுகிய அளவில் நகர்க்குள்ளும் நாகர் இனத்தவர் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். - -

அறிஞர் ஆர்.கே.மூக்கர்சி (R.K. Mookariee) என்பார், "வட இந்தியாவில் ம்ாளவத்திலும் . யமுனை யாற்றங்கரையிலும் நாகர்’ - ஆட்சி செய்தனர்"(15) என்று தம் நூலில் பதிந்துள்ளார். அங்கு இடம் பெற்றது. மட்டுமன்றி ஆட்சி செலுத்தும் அளவிற்கே கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலைபெற்றிருந்தனர். இவர் ஆட்சிக்காலம் கி.பி. 230 என்றும் அவ்வாசிரியர் குறித்துள் ளார். அஃதாவது பதரி திட்டையில் அன்னார் இடம்பெற்று நிலைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/71&oldid=584953" இலிருந்து மீள்விக்கப்பட்டது