பக்கம்:நாகப்பட்டினம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S些 - நாகபட்டினம்

காலத்திற்கு அடுத்தடுத்த நூற்றாண்டளவாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வால்காவிலிருந்து கங்கை வரை வரலாறு கண்ட வடமொழிப் பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயன்,

"அங்கு (வடபுலமாகிய அவந்தியில் - மாளவத்தில்) சில நாகர்களின் வீடுகளும் இருந்தன. மக்கள் அவர்களையும் பணியா (வணிகர்) என்று அழைத்தனர்(16) என்று ஆய்ந்து கண்டெழுதி னார். இவர் குறிப்பிடும் காலம் கி.பி. 420 ஆகும். இவரே.

"இவர்கள் (நாகர்கள்) தங்களை நாகர்கேந்திரப் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வர்" என்றும், தொடர்ந்து, -

"அவர்களிற் பெரும்பாலோர் பிராமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் (17) என்றும் சுபர்னயெள தேயன் என்னும் ஆரியர் தலைவன் வாயில் வைத்து எழுதியுள்ளார். இக்கருத்துகளால் நாகர் இந்தியாவில் குடியேறி நிலைத்தது மட்டுமன்றித் தாம் அவ்விடங்களுக்கு ஏற்பத் தம்மைக் காட்டிக் கொண்டனர் என்பதையும் அறியலாம். அத்துடன் இந்நாகர்கள் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டதை நாகநாட்டில் நாகர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்த ஆரியர் தலைவனையே, "நீ உச்சயினிக்குப் போனால் அங்கே தங்களைக் கிரேக்கர்கள் என்றே வெள்ளையாகச் சொல்லிக் கொள்ளும் அனேக நாகர்களைக் காணலாம். அவர்களைச் சத்திரியர்கள் (அரச குலத்தினர்) என்று ஒப்புக் கொள்ளும்படியாகப் பிராமணர்கள் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறார்கள்"(18) என்று பேசவைத்தார். இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய இக்கூற்றில் ஓர் உண்மை வெளிப்படுவதைக் காணலாம். நாகநாட்டு நாகர் ஆளும் மன்னர் குடியினர் என்பதே அவ்வுண்மை.

தம்மைக் கிரேக்கர் என்று கூறிக்கொள்வதாகச் சொன்னதை இப்படியும் சொல்லலாம். கிழக்குக் கரைவழி வந்தவர் - கிழக்குக் கரையர் - கிழேக்கர் கிரேக்கர் என்று உருப்பெற்றதாகவும் சொல்லலாம். * , -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/72&oldid=584954" இலிருந்து மீள்விக்கப்பட்டது