பக்கம்:நாகப்பட்டினம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 81

தலைநீட்டினர். தம் கொடையாக முத்தரையச் சிற்றரசர்க்குத் தஞ்சை ஆட்சியை வழங்கியமை கண்டோம். 3. விசயநகர அரையர் தஞ்சை (1257 - 1539)

பின்னர் அயல் மண் மன்னர் ஆட்சியாகச் சோழ நாட்டில் விசயநகர மன்னர் தலையீடு நேர்ந்தது. ஆந்திர மண்ணின் மைந்தரான விசயநகர் மன்னரில் கிருட்டிணதேவராயர் கி.பி. 1509-இல் பட்டஞ் சூடினார். இவர் பெயரிலும் பட்டப்பெயராக அமைந்த இராயர்' என்பது அரையர் என்னும் தமிழ்ச் சொல்லின் திரியே. இம்மன்னர்தம் தாய் மொழி தெலுங்கு. தெலுங்கு தமிழின் கிளைமொழியாகையால் அரையர் என்னும் ‘अप्रकी' பொருள் தரும் தமிழ்ச்சொல் அவரால் கைக்கொள்ளப்பெற்றது.

"புதுதில்லி தேசிய அருங்காட்சியகச் செப்பேடு" என்று தலைப்பிட்டுப் புலவர் செ. இராசு அவர்கள் (தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டுத்துறை இணைப்பேராசிரியர்) பதிப்பித்துள்ள செப்பேடு (7) தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை விசயநகர மன்னர்கள் ஆண்டதாகக் குறிக்கிறது. இதில் அசுவபதிதேவ மகாராயர் தொடக்கமாகச் சாளுவ திருமலை தேவ மகாராயர் இறுதியாக எட்டு மன்னர் பெயரைத் தந்து (மேலும் பலர் ஆண்டதாகக் கொண்டு),

"இவை பட்டம் பதினாறும் ராச்சிய - பரிபாலனம் பண்ணப்பட்ட"(8) என்று பதினாறு விசய நகர மன்னராட்சி இருந்ததாகக் குறித்துள்ளது. -

சென்னை அருங்காட்சியகச் செப்பேடு எனப்பட்டதிலும் "புசயலதேவ மகாராயர் தொடக்கமாகக் கிருட்டிணதேவ மகாராயர்' இறுதியாக 11. மன்னர் பெயர்களைக் குறித்து, "யிவர்கள் பிருதிவிராஜ்ய பரிபாலனம் பண்ணின பின்பு"(9) என்று சொல்கின்றது. இவையிரண் டிலும் இன்னோர் ஆட்சிக்காலம் குறிக்கப்பெறவில்லை. குறிக்கப் பெற்றுள்ள பெயர்களும் எவ்வகையிலும் ஒன்றித்தில்லை. ஆனால், இரண்டு பட்டியல்களிலும் கிருட்டிணதேவராயர் பெயர் உள்ளது.

இவ்விரண்டு செப்பேடுகளிலும் உள்ள தொடர் கொண்டு இம்மன்னர் சோழ நாட்டில் இருந்து நேர்முக ஆட்சி செலுத்தியதாகக் 「ちm、7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/99&oldid=584981" இலிருந்து மீள்விக்கப்பட்டது