பக்கம்:நாகப்பட்டினம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿臀 நாகபட்டினம்

அமர்ந்து ஆளவில்லை. எனவே, நாகையிலும் இவர் வருகை அமைந்திருப்பினும், இங்கு தங்கியோ, தம் ஆட்சி அலுவலரை அமைத்தோ இருந்தனர் என்று குறிக்க இயலாது. இருப்பினும் பொதுவாக இக்காலத்தில் நாகை களப்பிரர் பகுதிக்குள் இருந்தது என்றே கொள்ள வேண்டும்.

இவர் கால அடையாளமாகக் களப்பாள், களப்பாளன் முதலிய சொற்கள் இன்றும் உள்ளன. சோழநாட்டு ஆமூரில் 15 ஆம் நூற்றாண்டில் ஆமூர் முதலி' என்னும் களப்பாளன் இருந்ததைக் கவி காளமேகம் பாட்டால் அறிகிறோம். இது களப்பாளரின் சோழநாட்டு ஆட்சிக்கு ஒர் அடையாளமாகும்.

ஆறாம் நூற்றாண்டில் பாண்டியரும் பல்லவரும் களப்பிரரை வென்று அடக்கினர். சோழநாட்டிலும் களப்பிரர் ஆளுகை முடிந்தது. நாகையும் களப்பிரரிடமிருந்து பாண்டியர் கைக்கு மாறியது. கி.பி. 590 - இல் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று சோழநாட்டாட்சியைக் கொண்டதைக் கண்டோம். 2. பல்லவர் தலையீடு

வேலூர் பாளையச் சேப்பெடு, "காவிரி பாயப் பெற்ற சோழ நாட்டைச் சோழரிடமிருந்து சிம்ம விச்ணு என்னும் பல்லவ மன்னன் கைப்பற்றினான். என்று குறிக்கிறது. தொடர்ந்து பல்லவ மன்னர் சோழநாட்டாட்சியை வைத்திருந்தனர். நரசிம்மவர்மன் என்ற மாமல்லன் (கி.பி. 660) ஆட்சியிலும் சோழநாடு இருந்ததாயினும் பல்லவ மன்னர் தம் ஆளுமைக்குட்பட்ட சிற்றரசரையோ ஆளுநரையோ தஞ்சையில் வைத்தே ஆண்டனர்.

எனவே நாகைக்குப் பல்லவ மன்னர், ஆட்சிப் பொறுப்பில் வந்ததில்லை. ஆனால், மாமல்லன் சமயத் தொடர்பில் வந்துள் ளான். இவன் காலத்தில் மாமல்லபுரம் வாய்ப்பான துறை முகமாக்கப் பெற்றதால் நாகைத் துறைமுகம் வணிகத் தொடர்பில் துறைமுகமாக இருந்தது. சீன கீழை நாட்டு வணிகம் சிறப்புற நடந்ததால் நாகை தன் துறைமுகச் சிறப்பில் மேலோங்கியே நிற்கிறது. -

பிற்காலச் சோழர் ஆட்சிகளில் பல்லவர் சோழ நாட்டில் ങ്കിടങ്ങ്. பின்னர் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/98&oldid=584980" இலிருந்து மீள்விக்கப்பட்டது