பக்கம்:நாகப்பட்டினம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 7. 9

இவன் காலத்தில்தான் இத்தாலி நாட்டு வெனிசு நகரத்துப் பயணி மார்க்கோபோலோ (1254 - 1324) தமிழ் நாட்டிற்கு வந்தான். சீனநாட்டில் 20 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய இவன் கடற்பயணமாக இந்தியக் கீழைக் கடற்கரையில் மாமல்லபுரத் துறைமுகத்தில் இறங்கிக் கடற்கரை ஓரமாகத் தெற்கே பயணம் செய்தான். இவன் நாகையில் இறங்கியுள்ளான். பொன், முத்து, பவளம் விற்கப்படும் நகரங்களாக நாகை, திருநெல்வேலி, இராமேசுரத்தை இவன் குறித்துள்ளமையால் நாகையில் இவன் இறங்கியதை உணரலாம். இவ்வகையில் நாகை கி.பி. 1320 அளவில் குறிக்கப்படுகின்றது. -

மேலே கண்ட மூன்றாம் சடாவர்மனுடன் சோழ நாட்டில் பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவுற்றது.

பின்னர் பல்லவர் சோழநாட்டில் புகுந்து அவ்வப்போது சில்லாண்டுகள் ஆளுமை கொண்டனர்.

ஈ. அயல்புல மன்னர் ஆட்சி தமிழ் மண்ணில் அயல்புல மன்னர் ஆட்சி நான்காம் நூற்றாண்டுத் தொடக்கமாகத் தோன்றியது. அயல்புல மன்னர் என்பார் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வடபுலத்தவரும், தமிழின் கிளைமொழியான தெலுங்கு மொழியாளருமாவர். 1. களப்பிரர் களம் (கி.பி. 400 - 590)

முன்னர் குறித்தது போன்று கி.பி. நான்காம் நூற்றாண்டில் களப்பிரர் என்பார் சோழரையும், பாண்டியரையும் வென்று தமிழ் மண்ணில் ஆட்சி பெற்றனர். இதனை வேள்விக்குடிச் செப்பேடு அறிவிக்கிறது என்று முன்னரும் குறிக்கப்பட்டது.

இன்னோர் வடபுலத்தவர்; களவர் எனப்பட்டவர். தொனடை மண்டலத்தின் வடக்கே கொள்ளையராக வாழ்ந்தவர் என்பர். இவருள் பலர் புத்த மதத்தைத் தழுவியவர். இவருள் குறிப்பிடத்தக்க அச்சுத களப்பாளன் என்பான் தமிழ்நாட்டு மூவேந்தரையும் தளையிட்டான் என்று பிற்காலத் தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது. இக்காலத்தில் சோழ நாட்டுப் பகுதியும் இக்களப்பிரர் ஆளுகையில் இருந்தாலும் நேரடியாக இன்னோர் தஞ்சையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/97&oldid=584979" இலிருந்து மீள்விக்கப்பட்டது