பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாலடியார்-தெளிவுரை

176. ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலால், ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழப்படு உம், குன்றிய சீர்மையர் ஆயினும், சீர்பெறுவர், குன்றன்னார் கேண்மை கொளின்.

உயர்ந்ததும், அழகிய இடத்தை உடையதுமான ஆகாயத் திலே விளங்கும், ஒளிக்கதிர்களையுடைய பிரகாசமான சந்திரனைச் சேர்ந்திருப்பதனால், அதன்பாலுள்ள முயற் கறையும் மக்களால் வணங்கப்படும். அதுபோலவே குறைவான சிறப்புகளை உடையவர்களே ஆனாலும், அவர்கள் மலை போன்ற மேன்மையுள்ளவர்களின் தொடர்பினைக் கொள்வார்களானால், தாமும் அவர்களோடு சேர்ந்து மேன்மை அடைவார்கள்.

‘முயலுக்கு வணக்கஞ் செலுத்துவது தொழுவோர் கருத்தன்று; ஆயினும் அதுவும் தொழப்படும். அதுபோலவே குன்றிய சீர்மையரும் குன்றன்னார் கேண்மை கொளின் சீர்பெறுவர் என்பது கருத்து. - 177. பாலோடு அளாயநீர் பாலாகும் அல், லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்;-தேரில்

சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து

பாலோடு கலக்கப்பட்ட நீரானது பாலுடன் சேர்ந்து தானும் பாலாகத் தோன்றுமேயல்லாமல், நீராகத் தன்னுடைய நிற வேறுபாடு அறியப்பட்டுத் தோன்றாது. அதுபோலவே, ஆராய்ந்து பார்த்தால், நல்ல பெரியோர்களது பெருமையோடு சேர்ந்துவிடுவதனால், அற்பர்களுடைய சிறுமையான குணமும் வெளியே தோன்றாமற் போகும்.

‘அவர்களுடைய சிறுமைக்குணம் போகாவிட்டாலுங் கூடப் பெரியவர்களுடைய சேர்க்கையின் காரணமாக, அவர்களும் பெரியோராகப் பிறரால் மதிக்கப்படுவார்கள்’ என்பது கருத்து. .

178. கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல் ஒல்காவே ஆகும், உழவர் உழு படைக்கு: மெல்லியரே யாயினும், நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்றார் சினம்.

தோட்டப் பகுதியைச் சார்ந்த பெரிய தினைப்புனப் பகுதிகளிலேயுள்ள மரக்குற்றியை அடுத்திருக்கும் புல்லானது,