பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 97

உழவர்களுடைய உழுபடையாகிய கொழுமுனைக்கும்

பெயர்த்து எறிய முடியாததாகவே இருக்கும். அதுபோலவே,

ஒருவர் தம் அளவிலே வலியற்றவர்களேயானாலும்,

நல்லினத்தைச் சார்ந்தவர்களானால் அவரைப் பகைத்தவர்

களுடைய சினமும் செல்லாமற் போய்விடும்.

179. நிலநலத்தான் நந்திய நெல்லேபோல், தத்தம்

குலநலத்தால் ஆகுவர், சான்றோர்,-கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும்.

நல்லினத்தைச் சார்ந்தவரைப் பகைவரின் சினமும் அழிக்கவியலாது என்று கூறுவதன் மூலம், அவரைச் சேர்தலின் சிறப்புச் சொல்லப்பட்டது. குற்றி-மரம் வெட்டியபின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி. -

நிலத்தினுடைய வளப்பத்தினாலே வளமுடன் வளர்கின்ற நெற்பயிரைப்போல, மனிதர்களும், தாங்கள் தாங்கள் சேர்ந்திருக்கின்ற கூட்டத்தின் நல்ல இயல்புகளாலே தாமும் சான்றாண்மையை உடையவராவர். கப்பலின் சிறப்பை எல்லாம் கடுங்காற்றானது சென்று அழித்துவிடுவது போலச், சான்றாண் மையாகிய உயர்ந்த பண்பும், தீயகுணமுள்ள கூட்டத்தினர் சேர்வதனால் கெட்டு அழிந்துவிடும்.

‘சான்றாண்மை தீயினம் சேரக் கெடும்’ என்றதால், அதனைச் சேராமல் நல்லினமே சேரவேண்டும் என்பது சொல்லப்பட்டது.

180. மனத்தான் மறுவில ரேனுந் தாஞ் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்-புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே, எறிபுனம் தீப்பட்டக் கால். தம்முடைய மனத்தின் அளவிலே ஒருவர் குற்றமில்லா தவரே யானாலும், தாம் சேர்ந்த கீழான கூட்டத்தின் காரணமாக இகழப்படுவார். எப்படி யென்றால், வெட்டியழிக்கப்பட்ட காட்டிலே நெருப்புப் பற்றிய காலத்திலே, அக்காட்டிலுள்ள மணங்கமழும் சந்தனமும், உயர்ந்த வேங்கையும் ஆகிய மரங்களும் வெந்து போவதைப்போல என்க.

‘இயற்கையிலே குற்றமற்றவர்கூடச் சேர்க்கைக் குறை பாட்டால் குறையுடையவர்களாக இகழப்படுவார்கள்’ என்று கூறி நல்லினத்தைச் சேர்வதன் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.