பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நாலடியார்-தெளிவுரை

கோட்களைச் சொல்லித், தம்மை மயக்கிவிட்டாலுங் கூட அதனால் தம்முடைய மனத்திலே எவ்விதமானவொரு வேறுபாடும் இல்லாமல் கலக்கமடையாதவர்கள் எவரோ, அவர்களே விளக்கினிடத்தே விளங்கும் ஒளியுடைய சுடரைப் போன்று ஒளியுடன் விளங்கும் தூய்மையான உள்ளத்தை உடையவர் ஆவார்கள்.

புறங்கூறுவார்பேச்சைக்கேட்டுத்தாம்.ஒருவிதமனமாற்றமும் அடையாதவர்கள் பெருமை உடையவர் என்பது கருத்து.

190. முற்றுத்தம் துத்தினை நாளும் அறஞ்செய்து

பிற்றுத்துத் துத்துவர், சான்றவர்; அத்துத்து முக்குற்றம் நீக்கி, முடியும் அளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும். பெரியவர்கள், தாம் முதலிலே உண்ணும்படியான உணவினை, நாள்தோறும் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விட்டுப் பின்னரே தாம் உண்ணுதற்குரிய உணவினை உண்பார்கள். அங்ஙனம், அவர்கள் தாம் உண்பதற்கு முன்பே கொடுத்த உணவுத் தானமானது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களால் வரும் பாவங்களையும் போக்கி, அவர்கள் வாழ் நாள் முடியும் வரையும் அவர்களைத் துக்கத்தினின்று நீக்கியும் விடுவதாகும்.

இதனால் பசிக்கு உணவளிப்பதன் பெருமை சொல்லப் பட்டது.

20. தாளாண்மை

‘தாளாண்மை’ என்பது உயிருக்கு உறுதி தருகின்ற நல்ல செயல்களைச் செய்வதிலே ஒருவன் தளராத முயற்சி உடையவனாக இருப்பதைப்பற்றிக் கூறுவதாகும்.

வாழ்வின் பலப்பல காலங்களையும்,தன் மயக்க உணர்வின் காரணமாக உயிருக்கு நன்மை தராத பலவற்றினும் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவனே சாதாரண மனிதன். அங்ஙனமன்றி, உயிருக்கு நிலையான நன்மை தருவன இவைதாம் என உணர்ந்து, அவற்றில் மட்டுமே ஈடுபாடு உடையவராகிப் பிறவற்றை விலக்குவதற்கான உண்மை அறிவினைக் கொண்டவரே, உண்மையில் தாளாண்மை உடையவராவர்.