பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - நாலடியார்-தெளிவுரை

254. கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து,

நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல

இருப்பினும், நாயிருந் தற்றே, இராஅது

உரைப்பினும், நாய்குரைத் தற்று.

கல்வி கற்காமல் வளர்ந்துவிட்ட ஒருவன், உலகத்திலே,

நல்ல அறிவுடையவர்கள் இடையிலே புகுந்து அவர் அறியாமலும், தான் ஏதும் வாய் திறவாமலும் மெல்லென இருந்தாலும், அது ‘ஆன்றோர் சபையிலே நாயொன்று சென்று இருந்ததைப் போன்றதே யாகும். அப்படிப் பேசாதிராது அவன் ஏதாவது சொன்னாலும் அது, அந்த நாய் குரைத்ததைப் போன்றதே யாகும்.

‘சபை நடுவே நாய் புகுந்தாலும், அது குரைத்தாலும் அதனை எவரும் மதியாது துரத்தவே முற்படுவதுபோல, அவனையும் எவரும் புறக்கணித்து ஒதுக்கவே முயல்வர் என்பது கருத்தாகும்.

255. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்

கல்லாத சொல்லும், கடைஎல்லாம்; கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார், பொருள்மேல் படாஅ விடுபாக்கு அறிந்து. கீழ்மக்கள் எல்லாரும், முறையோடு கற்றறியாத போலிப் புலவர்களின் இடையிலே புகுந்து, தாம் கற்றறியாத செய்திகளைப் பற்றியும் அஞ்சாது பேசுவார்கள். கல்வி கேள்விகளினால் சிறந்த சான்றோர்களோ, தாம் கற்றறிந்த வற்றையும் கூடச் சொல்லும்படி பிறர் கேட்டாலும், அப்படிக் கேட்பவரின் அறிவானது தாம் சொல்லும் அரிய பொருளின் மேல் முழுவதும் செல்லாமல் விடுபட்டுப் போவதைத் தெரிந்து கொண்டவர்களாக, ஏதும் சொல்லாமலேயே இருப்பார்கள்.

புலவர்; இகழ்ச்சிக் குறிப்பு. ‘அறிவுடையோர் கேட்கும் தகுதி உடையவர்க்கு மட்டுமே சிறந்த பொருள்களை உரைப்பார்கள்; கீழ்த்தரமான அறிவினரோ எதனையும் அறிந்தவர்போல் எங்கும் அடக்கமின்றிப் பேசத் தொடங்கிவிடுவர் என்பது கருத்து.

256. கற்றறிந்த நாவினார் சொல்லார், தம் சோர்வஞ்சி

மற்றையர் ஆவார் பகர்வர், பனையின்மேல்

வற்றிய வோலை கலகலக்கும்; எஞ்ஞான்றும்

பச்சோலைக்கு இல்லை, ஒலி.