பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 135

நூற்களைக் கற்று, உண்மைப் பொருள்களைத் தெளிவாக அறிந்த புலவர்கள், தம் சொற்களிலே ஏற்பட்டுவிடுகிற சோர்வுக்குப் பயந்து கண்டபடி பேச மாட்டார்கள். மற்றைய சிற்றறிவினரோ, அதற்கு அஞ்சாமல் கண்டவிடமெல்லாம்

சொல்லுவார்கள். இவை எவை போல என்றால், பனை

மரத்தின் மேலுள்ள உலர்ந்த ஒலை கலகலவென ஒலிப்பதையும் பசுமையான ஒலைக்கு அத்தகைய ஒலி செய்யும் குணம் இல்லாமையும் போல என்க.

“ஈரமற்ற ஓலை ஒலித்தல்போல, அறிவற்றோர் பிதற்றுவர்; பசுமையுள்ள ஓலை ஒலிக்காததுபோல அறிவுள்ளோர் அடக்கமாக இருப்பர் என்பது கருத்து.

257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்

நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்; குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்து சென்றிசையா ஆகும், செவிக்கு.

நன்மை எதுவென அறிந்துணராத மனிதர்க்குத் தருமத்தின் வழியானது இப்படிப்பட்டது என்று சொல்லுங்காலத்திலே, பன்றிக்குக் கூழ்வார்க்கும் தொட்டியிலே மதுரமான மாங்கனியைச் சாறுபிழிந்து விடுவது போன்றதாகவே அது முடியும். மலையின் மேல் அடிக்கிற கட்டுத் தறியினைப்போல, அத் தருமநெறிகள், தம் தலை சிதைந்து, அவர்களின் காதுக்குச் சென்று கேளாதவைகளாகவும் போய்விடும்.

‘அறிவின்மை உடையவர்களுக்கு அறம் உரைப்பது வீண்

  • ,

என்பது கருத்து. தகர்ந்து-சிதறி. மலையிலே அடிக்கும் -

கட்டுத்தறியாகிய முளை, தன் தலை சிதறுமேயல்லாமல், மலையினுள் புகுவதில்லை. அதுபோலவே மூடனுக்குச் செய்யும் தரும உபதேசமும் அவனுள்ளத்தில் பதியாமற் போய்விடும்.

258. பாலாற் கழிஇப், பலநாள் உணக்கினும்,

வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று; கோலாற் கடாஅய்க் குறினும், புகல் ஒல்லா, நோலா உடம்பிற்கு அறிவு.

நாள்தோறும் வெண்மையான பாலினாலே கழுவிப் பல நாட்கள் உலர்த்தி வைத்தாலும், இயல்பாகக் கருநிறமுடைய கரிக்கு, வெண்ணிறத்தை உடையதான ஒரு தன்மை ஒருபோதும் உண்டாகவே மாட்டாது. கோல் கொண்டு அடித்து அதட்டிச்