பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 5

1. செல்வம் நிலையாமை

\

உலக வாழ்விலே, செல்வம் வாழ்வின் இன்பத்துக்கு மிகவும் அடிப்படையான ஒன்றாகும். போதிய அளவு அது இல்லாதபோது, வாழ்வே மிகவும் வருத்தம் உடையதாக ஆகிவிடும். இது பற்றியே, ‘பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று குறளும் கூறும்.

இப்படி, மிகவும் இன்றியமையாத ஒன்றினை, ‘நிலையாமை எனக் கருதி ஒதுக்க வேண்டும்’ என்று வற்புறுத்துவது இந்தப் பகுதி. செல்வம் ஒரிடத்திலே நிலைபெற்றிருப்பதன்று; அதனால் அதன்பால் அளவுக்கு மீறிய பற்று வைக்க வேண்டாம் என்பதுடன் அது வந்து சேர்ந்த காலத்திலே அதனால் முடிந்தவரை அறஞ்செய்து, பலர்க்கு உதவி செய்து வாழ்தலும் வேண்டும். இந்த நெறியே இதன்கண் கூறப்பட்டிருக்கின்றது.

“துறவு நிலையிலே, செல்வத்தின்பால் எழுகின்ற பற்றினைத் துறப்பது முதன்மையானது என்பதும் இதன் கருத்தாகும்.

1. அறுசுவை உண்டி, அமர்ந்து இல்லாள் ஊட்ட, மறுசிகை நீக்கி உண்டாரும்,- வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓரிடத்துக் கூழ், எனின்,

செல்வமொன்று உண்டாக வைக்கற்பாற்று அன்று.

காதல் மனைவி அருகே அமர்ந்து அறுசுவைகளுடன் கூடிய உணவினை அன்புடன் வாயிலே எடுத்தெடுத்து ஊட்டிக் கொண்டிருக்கும் போதும், அடுத்த உருண்டையை வேண்டாமெனத் தடுத்து உண்டு களிப்பவர் சிறந்த செல்வச் செழுமையினையும் இன்பவாழ்வினையும் உடையவர்கள். அப்படிப்பட்டவர்களும் ஒருசமயத்தேவறுமையாளராவார்கள்; ஓரிடத்திலே சென்று புன்மையான கூழினையும் யாசித்து நிற்பார்கள். செல்வத்தின் நில்ையாமை இப்படிப்பட்டது என்றால், செல்வம் என்கின்ற ஒன்றினை நிலையுள்ளதாகக் கொண்டு பேணிக்காத்து வைக்கப்பட வேண்டியதாகக்