பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - நாலடியார்-தெளிவுரை

மானம் வேறு; நாணம் வேறு. இதனை நன்றாகக் கவனித்தல் வேண்டும். மானமிழந்தும் உயிர் வாழாத பெருந்தகையோர் பலர் வரலாறுகளை நாம் தமிழ் இலக்கியங்களுள் காணலாம்

291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்

பெருமிதம் கண்டக் கடைத்தும்;- எரிமண்டிக் கானந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே மானம் உடையார் மனம்.

தம்மிடத்திலே, செல்வமானது வலிமை உடையதாக இருப்பதன் காரணமாகத் தக்க நற்குணம் இல்லாதவர்கள் செய்கின்ற வரம்பு கடந்த நடத்தையைப் பார்த்த பொழுது மானம் உடையவர்களுடைய மனமானது நெருப்புப் பற்றிக் காட்டிலே மண்டிய பெருந்தீயைப் போலக் கனன்று கொதிப்படையும். -

‘செல்வச் செருக்கினால் தீயோர் வரம்பு கடந்து நடக்கும்போது, மானம் உள்ளவர்கள் மனக்கொதிப்பு அடைவார்கள்’ என்பது கருத்து.

292 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று

தம்பா டுரைப்பரோ, தம்முடையார்? தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ, தாமுற்ற நோய்?

தம்முடைய மானத்தைத் தாம் காத்துப் பேணுகின்ற தன்மையினை உடையவர்கள், வறுமையினால் தம் உடம்பு எலும்பாகப் போய் உதிர்கின்ற நிலையினையே அடைந்தாலும், நற்குணம் இல்லாத செல்வர்களின் பின்னே சென்று தமது வருத்தத்தைச் சொல்லுவார்களோ? சொல்லவே மாட்டார்கள். தம் வருத்தத்தை வாய்திறந்து சொல்வதற்கு முன்னமே. குறிப்பினால் அறிந்து உதவத்தக்க நற்குணம் உடையவர்களுக்குத் தாம் உற்ற வருத்தத்தைக் கூறாமலும் இருப்பார்களோ?

‘மானமுள்ளவர்கள், தம் கொடிய வறுமைக் காலத்தும் தீயவர்களை அணுகமாட்டார்கள்; நல்லவர்களையே அணுகுவார்கள் என்பது கருத்து.

293, யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்

காணவே கற்பழியும் என்பார்போல்,-நாணிப்