பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - நாலடியார்-தெளிவுரை

கருதுவது முறையாகுமோ? ஆகாது. அதனை உள்ளபோதே அறவழிகளிற் செலவிடுவதே அறிவுடைமையாகும்.

அறுசுவை-தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு அமர்ந்து-அன்புடனே அருகே அமர்ந்துகொண்டு சிகை-சோற்று உருண்டை, உருவ ஒப்புமைபற்றிக் கூறினர். ‘கூழ் உண்பவர் மிகவும் வறிஞர். அவர்பாலுஞ் சென்று அதனையும் யாசிக்கும் நிலை என்றமையால், மிகுதியான வறுமைநிலை குறிக்கப்பட்டது. வீடும், செல்வமும், மனைவியும், எல்லாமும் இழந்து பிச்சைக்காரர்களாவதும் இயல்பு என்பது கருத்து.

2. துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டும்

பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க அகடுஉற யார்மட்டும் நில்லாது , செல்வம் சகடக்கால் போல வரும்.

நடுவுநிலைமை பொருந்த, எவரிடத்துமே செல்வம் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல, மேலும் கீழுமாகச் சுற்றிசுற்றி இடம் மாறிக்கொண்டே போகின்ற இயல்பினை உடையது அது. அதனால், எருமைக் கடாக்களை நடத்திப் போரடித்துப் பெற்ற நெல்விளைவாகிய, குற்றமற்ற பெருஞ்செல்வமானது விளைந்து தோன்றிய காலத்திலே, அதனை எவருக்கும் தராமல் சேமித்துப் பூட்டி வைக்காதீர்கள். அது கிடைத்த காலந்தொடங்கி, அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்ற அறநினைவுடன், பலரோடும் கூடிப் பகிர்ந்து உண்பீர்களாக!

துகள் - குற்றம். துகள் நீர் பெருஞ்செல்வம் - வேளாண்மையால் வந்த பெருஞ் செல்வம்; அதுவே குற்றமற்ற ‘பெருஞ்செல்வம்’.பகடு - எருமைக்கடா. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’ என்றது குறளும். உணவுப் பொருள்களை முறையின்றிச் சேமித்து வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது இந்தப் பாடல்.

3. யானை எருத்தம் பொலியக், குடைநிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - மேலை வினைஉவப்ப வேறாகி வீழ்வர், தாம்கொண்ட மனையாளை மாற்றார் கொள.

நால்வகைச் சேனைகளும் தம் பின்னாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, அவற்றின் தலைவராகப் பட்டத்து