பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - நாலடியார்-தெளிவுரை

குற்றமற்ற மாற்றுயர்ந்த பசும்பொன்னின் மேலாக, மாட்சிமையான இரத்தினங்களைப் பதித்துச் செய்யப்பட்டதே என்றாலும், செருப்பானது காலில் அணிவதற்கே என்றும் தகுதி உடையதாகும். அதுபோலவே பொருந்திய செல்வம் உடையவர்களானாலும், கீழ் மக்கள் அவர்கள் செய்யும் இழிவான தொழில்களால் இழிவுடையவராகவே கருதப்படுவர்.

“எத்துணைச் செல்வமுடையவராயினும் சான்றோர், கீழ் களைக் கீழ்களாகவே அவர்கள் செயல்களைக் கருதி மதிப்பர்’ என்பது கருத்து.

348. கடுக்கெனச் சொல்வற்றாம்; கண்ணோட்டம் இன்றாம்; இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்;-அடுத்தடுத்து வேகம் உடைத்தாம்; விறன்மலை நன்னாட! ஏகுமாம்; எள்ளுமாம்; கீழ்.

பெருமை பொருந்திய மலைகளுள்ள நல்ல நாட்டை உடையவனே! ‘கீழ்மகனது தன்மையானது கடுமையாகப் பேசவல்லதாம்; கண்ணோட்டம் இல்லாததாம்; பிறரிடம் உண்டான துன்பத்திற்கு மகிழ்வடைவதாம்; அடிக்கடி கோபாவேசத்தை உடையதாம்; கண்ட விடத்துச் செல்வதாம்; பிறரை இகழ்ந்து பேசுவதாம்” என்று எல்லாம் அறிவாயாக

கீழ்மக்களது இயல்புகள் இதன்கண் சொல்லப்பட்டன. கடுக்கென கடுமையாக வேகம் - ஆத்திரம், கோபாவேசம்

349. பழையர் இவர் என்று பன்னாட்பின் நிற்பின்

உழையினியர் ஆகுவர், சான்றோர், -விழையாதே, கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண் சேர்ப்ப எள்ளுவர், கீழா யவர். நெய்தற் பூக்கள் தேனை ஒழுக்குகின்ற, ஒலிக்கிற கடலினது குளிர்ச்சியான கரையை உடையவனே! ஒருவர், தமது பின்னாக வந்து நின்றால் இவர்கள் பலநாள் பழகியவர் என்று எண்ணி, அவர்களிடத்திலே இனிமையானவர்களாக விளங்குவர் சான்றோர்கள். கீழ்களோ, அப்படித் தம்பின் பிறர் வந்து நிற்பதையும் விரும்பாதவராக, அவரை இகழ்ந்து பேசி நிந்திப்பார்கள்.

‘கீழோர்கள் நட்பின் தன்மையை அறியாத கீழ்மைக் குணம் உடையவர்கள்’ என்பது கருத்து