பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 179

350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்

வையம்பூண் கல்லா, சிறுகுண்டை - ஐயகேள்; எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச் செய் தொழிலாற் காணப் படும்.

அரசனே! கேள்; கொய்யத்தக்க புல்லைக் கொய்து கொடுத்தும், கழுவுதல் முதலியவற்றால் சுத்தப்படுத்தியும் நன்றாகப் பேணினாலும், சிறிய எருதுகள், வண்டியைப் பூண்டு இழுக்க மாட்டாவாம். அது போலவே, பொருந்திய செல்வம் உடையவர்களானாலும் கீழ்களை அவர்கள் செய்யுங் காரியங்களால் பயனற்றவரென அறிதல் கூடும்.

‘எவ்வளவு மேன்மைப்படுத்த முயன்றாலும், கீழோர் கீழான செயல்களையே செய்வார்கள் என்பது கருத்து.

36. கயமை

‘கயமை என்பதும் கீழ்மை என்பதும் ஒரே மனப் பண்பினைக் குறிப்பனவேயாகும். நல்ல குணங்கள் என்று பல காலுஞ் சொல்லப்பட்டனவெல்லாம் அமையாது ஒழிந்த சிறுமைக் குணமே, பொதுவாகக் கயமை என்று சான்றோரால் கூறப்படும்.

இக்குணம் உடையோரின் தன்மைகள், அவருடைய செல்வமும் பிற தகுதிகளும் எந்த உயரிய நிலைகளிலிருந்த காலத்தினும், கீழ்த்தரமானவைகளாகவே இருக்கும் என்பது தெளிவு.

இதனை முன் அதிகாரத்து ஓரளவு தெளிவுபடுத்தியதன் பின், மேலும் வற்புறுத்துவது கருதி, இப்பகுதியுள்ளும் வகுத்து உரைக்கின்றனர்.

இக்குணம் அமையாது காப்பது நல்வாழ்விற்கு இன்றியமையாதது என்பது கருத்தாகும்.

351. ஆர்த்த அறிவினர், ஆண்டிளையர் ஆயினும்

காத்தோம்பித் தம்மை அடக்குப: -எருவைபோல் தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல் போத்தரார், புல்லறிவி னார். நிறைந்த அறிவினை உடையவர்கள், தமது பருவத்திலே, இளையவர்களே யானாலும், தம் புலன்களைத் தீய வழிகளில் செல்லாமல் தடுத்து பாதுகாத்துத், தம்மை அடக்கி ஒழுகுமாறு