பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

புலியூர்க் கேசிகன் 197

384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்,-உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்.

கண்ணுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலனது விருப்பத்திற்கு ஏற்ற வகையெல்லாம் தன்னைப் புனைந்து கொள்ளுபவளாகவும், அச்சம் உடையவளாகவும், ஊரிலுள்ள பிற ஆடவர்க்குநாணி ஒதுங்கும் இயல்பினளாகவும், தன் கணவனுக்கு அஞ்சிக் காலமறிந்து அவனோடு பிணங்கிப் பின் இன்பமுண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்ற வளாகவும், கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள்.

385. எஞ்ஞான்றும், எங்கணவர் எந்தோன்மேற் சேர்ந்தெழினும்,

அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்

எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ, பொருள் நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகு வார்?

எந்த நாளும், எம்முடைய கணவர், எம்முடைய தோள்மேல் அணைந்து எம்மைக் கூடி எழுந்தாலும் புதிதாக உறவுகொண்ட அந்த முதல் நாளிலே யாம் கண்டது போலவே இன்றும் அவரைக் கண்டதும் நாணங் கொள்ளுகின்றோம். எம் தன்மை இவ்வாறிருக்கப் பொருள் விருப்பத்தினால் எப்பொழுதும் பலருடைய மார்புகளையும் அணைந்து நடக்கின்ற பொதுமகளிர், வெட்கமின்றி, அந்தப் பலருக்கும் உரியவராயிருக்கின்றனரே? இது என்ன பெண் தன்மையோ?

தன் கணவனின் மீது பற்றுள்ள மனைவி ஒருத்தி, பரத்தையை இவ்வாறு இகழ்கிறாள் என்று கொள்க. இதனால் கற்புடை மகளிரின் தன்மை புலப்படும்.

386. உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலற்றால்

வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்:-தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள்; அனைத்தரோ; நாணுடையாள் பெற்ற நலம். வள்ளல் தன்மையை மேற்கொண்டவனிடத்திலேயுள்ள மிக்க செல்வமானது, உள்ளத்திலே நல்லறிவினை உடையவள் கற்றறிந்த நூற்பொருள் போலப் பலருக்கும் பயனுடைய

தாயிருக்கும். அதுபோல, நாணம் உடைய குலமகள்