பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - நாலடியார்-தெளிவுரை .

396 அரக் காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு, அன்னோ!

பரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த பஞ்சிகொண் டுட்டினும், பையெனப் பையென’ என்று அஞ்சிப், பின் வாங்கும் அடி! (மகளைப் போக்கிய தாய் இரங்கியது இது)

செவ்வாம்பலைப் போலத் தோன்றும் வாயிதழ்களையும் அழகிய இடையினையும் உடைய எம் மகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பைத் தடவினாலும் அதனையும் பொறுக்கமாட்டாமல் பயந்து, ‘மெதுவாக மெதுவாக!’ என்று பின்வாங்கும் இயல்புடைய பாதங்கள், இப்போது, பருக்கைக் கற்களையுடை காட்டையும் எங்ஙனம் கடக்கப் பொறுத்தனவோ?

397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர் மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேல் கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து. (தலைவனது பிரிவை ஆற்றாது தலைவியின் நிலைமையைத் தோழி கூறியது இது)

ஒலை எழுதும் கணக்கருடைய ஆரவாரமும் அடங்கிப் போயின, அற்பமான சிவப்பினையுடைய மாலைக்காலத்திலே தன்னை மணந்தவனின் பிரிவை நினைந்து, தான் சூடியிருந்த மாலையையும் பிய்த்தெறிந்து அழகிய தனங்களின்மேல் அலங்காரஞ் செய்திருந்த சந்தனச் சாந்தையும் உதிர்த்துத் தள்ளி, அழுதுகொண்டே இருந்தாள் அவள்.

இதனால், தலைவன் விரைந்து மணவினை கொள்ளலிலே நாட்டஞ் செலுத்தவேண்டும் என்பது குறிப்பு.

398. கடக்கருங் கானத்துக் காளைபின், நாளை

நடக்கவும் வல்லையோ? என்றி-கடர்த்தொடீஇ பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃதுரும் ஆறு? (உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது இது)

ஒளிசிதறும் வளையல்களை உடையவளே கடத்தற்கு

அரியதான காட்டிலே காளைபோன்ற தலைவனின் பின்னாக நாளைக்கு நடந்து போகவும் நீ வல்லமை உடையையோ?”