பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 15

‘அடுத்த நொடியிலே சாவு வருவதை அறியாமல் மறிதளிர் உண்டு மகிழ்வது போலவே, அடுத்த நொடியிலே சாவு வருதலும் கூடும் என்பதையறிந்து அறவழியிலே செல்லாமல் சிற்றின்பங்களிலே ஈடுபடுவர் அறியாதார்’ என்பது கருத்து. வெறியயர்தல் ஆவேசித்து ஆடுதல்.வேன்மகன் - பூசாரி. பாணி - கையில், முறி - தளிர் தயங்க - அசைந்து கொண்டிருக்க குளகு - தளிர்.

- 17. பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் .

கனியுதிர்ந்து வீழ்ந்தன்று, இளமை; -நனிபெரிதும் வேற்கண்ணள்!’ என்றிவளை வெஃகன்மின்; மற்றிவளும் கோற்கண்ணள் ஆகும், குனிந்து. s

குளிர்ச்சி பொருந்திய சோலைகளிலேயுள்ள, பயனைத் தருகின்ற மரங்கள் எல்லாம், கனிகள் உதிர்ந்து வீழ்ந்தபின் தோன்றும் பரிதாபமான நிலையினைப் போன்றதுதான் வாழ்வு. ‘மிகவும் சிறப்பான வேல்போன்ற கண்களை உடையவளா யிருக்கின்றாள்’ என்று சொல்லி இவளை விரும்பாதீர்கள். இவளும், தன் உடல் குறுகிக், கண் பார்வை இழந்து, தன் வழி தெரிவதற்குத் தன் கைக்கோலையே கண்ணாகக் கொள்ள வேண்டிய முதியவளாக ஆகிவிடுபவளே!

அனைவரும் விரும்பும் வண்ணம் கணிகளோடு விளங்கிய சோலை மரங்கள், அக்கனிகள் வீழ்ந்து போன பின்னர் ஒருவராலும் விரும்பப் படாதவாறு போல, இளமை கழிந்தபின் எந்தப் பெண்ணுமே எவராலும் விரும்பப்படாள். அதனால், அப்படிப்பட்ட நிலையற்ற இளமையை அறிவுடையோர் விரும்பார்கள் என்பது கருத்து. பனிபடு குளிர்ச்சி பொருந்திய, நனி - மிக்க, வெஃகுதல் - விரும்புதல். குனிந்து கூனிக் குறுகி.

18. பருவம் எனைத்துள? பல்லின்பால் ஏனை?

இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால் உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார், அறிவுடையார்.

‘பிராயம் எவ்வளவு ஆகியுள்ளது! பல்லின் தன்மை எப்படியுள்ளது? இரண்டு கவளமும் உண்டு வீட்டீரோ?’ என்று வயது முதிர்ச்சியினை முறைமையால் உள்ளத்திலே எண்ணி ஆராய்தலைச் செய்யப்படுவதனால், தேகத்தின் வலிமையைப் பற்றி எண்ணி, அறிவு உடையவர்கள் அளவுக்குமீறி மகிழ மாட்டார்கள்.