பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . நாலடியார்-தெளிவுரை

காலந்தோறும் இப்படி விசாரிக்கும் முறை மாறுதலை உடையது உடலின் வலிமை. அதனால், ஆன்றோர் அதனை நிலையானதென நினையாது உயிர்க்கு உறுதி தேடுவதிலேயே மனஞ் செலுத்துவார்கள்’ என்பது கருத்து. பருவம்-பிராயம். வரிசை முறைமை, உபசாரமும் ஆம். சிகை - கவளம் கோள் - வலிமை.

19. மற்றறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே, கரவாது, அறஞ்செய்ம்மின் முற்றி இருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு! மரங்களிலே முதிர்ச்சியுற்றிருந்த கனிகள் மட்டுமே அல்லாமல், நல்ல காய்களும் கடுங்காற்றினால் உதிர்ந்து போதல் நிகழ்வதும் உண்டு. அதுபோலவே, முதியவர்கள் மட்டு மல்லாமல் இளமைப் பருவத்தினரும் மாண்டு போதல் நிகழ்வதும் ஏற்படலாம். அதனால், நல்ல செயல்களை எல்லாம் நம்முடைய பின்காலத்தே அறிந்து செய்வோம்; இப்போது யாம் இளையோம்தாமே என்று, எவரும் கருத வேண்டாம். கையில் பொருள் வந்து கிடைத்த பொழுதிலேயே உள்ளத்தில் கரவு ஏதுமின்றி அறஞ் செய்வதிலே ஈடுபடுங்கள்: அதுதான் சிறந்தது.

‘இளமை அநுபவிக்கும் வயது; எல்லாம் வயதானபின் தருமஞ் செய்யலாம் என்று நினையாதீர்கள். இளமை நிலையற்றது என்பதை உணர்ந்து உடனே தருமஞ் செய்வதிலே ஈடுபடுங்கள் என்பது கருத்து. கைத்து உண்டாம் போழ்து - கையிலே செல்வம் வந்து உண்டான பொழுது, கரவாது - ஒழியாது. தீவளி கடுங்காற்று, புயல், நற்காய் - நல்ல காய்.

20. ஆட்பார்த்து உழலும் அருளில்கூற்று உண்மையால் தோட்கோப்புக் காலத்தாற் கொண்டு உய்மின்,

- . பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான், மற்றதன் கள்ளங் கடைப்பிடித்தல் நன்று. ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று. அது உண்மையாதலால், நல்வினையாகிய கட்டுச்சோற்று மூட்டையைத் தேடிக்கொள்ளும் காலத்தோடேயே தேடி வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள். கருப் பையிலே