பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 77

அவன்றுணையா வாறுபோ யற்றே, நூல்கற்ற மகன்றுணையா நல்ல கொளல்.

தோணியினைச் செலுத்துகின்றவன் பழமையான சாதிகளுள்ளும் கடைப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே என்பதை அறிந்தாலும், அவனை யாருமே இகழமாட்டார்கள். அவனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடந்து கரைசேரவே நினைப்பார்கள். இதனைக் கருதுதல் வேண்டும். இதுபோலவே, ஒவ்வொருவரும் அறிவு நூல்களைக் கற்றவன் எந்த வகுப்பினனாயினும் அதனைக் கருதாது, அவனைத் துணையாகக் கொண்டு நல்ல நூற்பொருள்களைத் தாமும் கற்றுக் கொள்ளல் வேண்டும்.

“ஆசானாயிருக்கத் தக்கவன் கல்வியறிவு உடையவனே அல்லாமல் குலவுயர்வு உடையவன் அல்லன் என்று கூறுவதன் மூலம், கல்வியால் குலப்பிறப்பின் இழிவும் போகும், உயர்வும் வாய்க்கும் என்பது கூறப்பட்டது.

137. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார், இகலிலார், எஃகுடையார், தம்முட் குழிஇ, நகலின் இனிதாயின், காண்பாம்; அகல வானத்து உம்பர் உறைவார் பதி.

தொன்றுதொட்டு வழிவழியாக வருகின்ற குற்றமற்ற நூற்கேள்விகளினது தன்மையைப் பெற்றுள்ளவர்களும், பகைமைக் குணமானது இல்லாதவர்களும், ஆயுதம்போற் கூர்மையான நுட்ப அறிவு உடையவர்களும், தம்முள் ஒன்று கூடியிருக்கும் அவையினிடத்தே கூடியிருந்து மகிழ்தலைக் காட்டினும் இன்பந் தருவதாகுமானால், யாமும், பரந்த வானுலகத்தே தேவர்கள் வாழும் நகரமாகிய அமராவதியைச் சென்று காண்போமாக.

‘அறிவுடையோர் அவையிலே கூடியிருக்கும் இன்பத்துக்கு வானுலகத்து இன்பமும் நிகராகாது’ என்றது இது. தவல். தவறுதல். இகல்-பகைமை. எஃகு-வேல்; அதுபோற் கூர்மையான நுண்ணறிவு.

138. கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை

நுனியிற் கரும்பு தின்றற்றே;-நுனிநீக்கித் தூரிற்றின் றன்ன தகைத்தரோ, பண்பிலா ஈரம் இலாளர் தொடர்பு.