பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாலடியார்-தெளிவுரை

146. இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், மற்றேனை

மனநன்மை, என்றிவை எல்லாம்-கனமணி முத்தோ டிமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப! இற்பிறந்தார் கண்ணே யுள.

சிறந்த நவமணிகள் முத்துக்களோடுஞ் சேர்ந்து பிரகாசிக்கின்ற, முழங்கும் கடலினையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்கு உரிய தலைவனே தம்மைச் சேர்ந்தவர் நல்லவராயிருத்தலும், தாம் இனிமையான சொற்களையே சொல்லுதலும், தம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இல்லை என்னாது கொடுத்தலும், மற்றும் தம் மனம் தூய்மை யோடிருத்தலும் ஆகிய இவை எல்லாம், நல்ல குடியிற் பிறந்தவர்களிடத்திலேயே உள்ளனவாகும்.

நல்ல குடிப் பிறந்தவர்களிடமே இவை எல்லாம் உள்ளன வாதலின், அக்குடியின் சிறப்புப் போற்றப் பெற்றது.

147. செய்கை அழிந்து, சிதன்மணிடிற் றாயினும்,

பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும், எவ்வம் உழந்தக் கடைத்தும், குடிப்பிறந்தார், செய்வர், செயற்பா லவை. பெரிய வீடாக இருந்தால், அதன் கட்டுக்கோப்பு எல்லாம் அழிந்துபோய், எங்கும் கறையான்கள் நெருங்கிப் பிடித்திருந்தாலும், மழைநீர் உள்ளே ஒழுகாத ஒரு பக்கத்தையாயினும் அது உடையதாயிருக்கும். அதனைப் போலவே, உயர்குடியிலே பிறந்தவர்கள் தாம் துன்பத்திலே உழன்று கொண்டிருக்கும் காலத்தினும், தாம் செய்வதற்குரிய கடமைகளைத் தவறாது செய்வார்கள்.

செய்வதற்குரியவற்றையே செய்வார்கள் என்றதன் மூலம், அவர்கள் செய்யத்தகாத காரியங்களிலே ஈடுபடமாட்டார்கள்

என்னும் பெருமையும் கூறப்பெற்றது.

148. ஒருபுடை பாம்பு கொளினும், ஒருபுடை

அங்கண்மா ஞாலம் விளக்குறுஉம்-திங்கள்போல், செல்லாமை செவ்வனேர் நிற்பினும், ஒப்புரவிற்கு ஒல்கார், குடிப்பிறந் தார்.

தன்னுடைய ஒரு பக்கமானது பாம்பினால் விழுங்கப்

பட்டிருக்கும் காலத்தினும், தன் மற்றொரு பக்கத்தினால் அழகிய

இடத்தையுடைய பெரிய பூமியைத் திங்களானது ஒளியுடைய

தாகச் செய்யும். அதுபோலவே, தங்கள் முயற்சிகள் ஈடேறாமை