பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தட்டில் வைத்து நெருப்பிட்டுக் கொளுத்தி, அதிலிருந்து எழும் புகையை மூக்கினால் உறிஞ்ச வேண்டும் அம் மருந்துப் புகை இதம் அளிக்கும். அதன் மணம் தனிரகமானது. இங்கிலாந்திலிருந்து அழகிய பச்சைநிற டப்பாவில் அடைக்கப்பட்டு இறக்குமதியாகியது அந்த மருந்துப்பொடி திருநெல்வேலி டவுணில், வெள்ளம் தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில், மணக் கடப்பிள்ளை வீட்டு வளைவு என்ற அமைப்பில் இருந்தது.நாங்கள் குடியேறிய வீடு பல வீடுகள் கொண்டது ஒரு வளைவு (வளவு என்று வழக்கில் சொல்லப்படும்) நெடுவளவு, பெரிய வளவு, ஏட்டுப்பிள்ளை வீட்டு வளவு என்ற ரீதியில், பல அமைப்புகள். மணக்கடப் பிள்ளை வீட்டு வளைவில் இரு வரிசை வீடுகள். ஒவ்வொரு வரிசையிலும் பெரியதும் சிறியதுமாக நான்கு வீடுகள் ஆக எட்டு வீடுகள் இருந்தன. முதல் வீடு சற்றே பெரிதானது. வேணுப் பிள்ளை என்பவர் வசித்தார். வசதியானவர். இரண்டாவது வீட்டில் கோமதிநாயகம் பிள்ளை மனைவியுடன் வசித்தார். குழந்தைகள் இல்லை. அவரது வீட்டை ஒட்டி அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் நாங்கள் குடிபுகுந்தோம். சுமாரான வீடு. நான் நான்காவது வகுப்பு படித்து முடிக்கிற வரை நாங்கள் அந்த வீட்டில் தான் வசித்தோம். மாமாவீட்டில் தங்கிப் படித்த கல்யாணி அண்ணனும் எங்களோடு வந்துவிட்டான். வீட்டுச் சொந்தக்காரர் பெயர் கோமதிநாயகம் பிள்ளை. அவர் மனைவியின் பெயர் கோமதி அம்மாள். அவர்களது திருமணத்துக்கு முன்பு பொருத்தம் பார்த்த போது, பெயர்ப் பொருத்தம் பிரமாதமாக அமைந்திருக்கிறது என்று சோதிடர் சொல்லியிருப்பார் மற்றவர்களும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு அந்த அம்மாள் தனது பெயரைத்தானே சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. சமூகமரபு காரணமாக சமூக வழக்கப்படி, திருமணமாகி ஒரு குடும்பத்தின் மருமகளாக வாழ வந்து சேர்கிற பெண், ಹಣTarr மற்றும் மாமனார் மாமியார் மச்சினார் நாத்தனார் முதலிய உறவுக்காரர்களின் பெயர்களை உச்சரிக்கக்கூடாது; அவர்கள் பெயரை உரக்கச் சொல்வது மரியாதைக் நிலைபெற்ற நினைவுகள் 3; 101