பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைவாகும் என்றொரு விதி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அவசர அவசியம் காரணமாகக் கூட அப் பெயர்களை பெண்கள் வாய்விட்டுச் சொல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அதனால், பெயர்களை சொல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில் பெண்கள் பேசுகிற விதம் வேடிக்கையாகவும் குழப்பம் தருவதாகவும் இருந்தது. அந்த வீட்டம்மாள் பெயர் கோமதி. அவள் பெயரை யாராவது கேட்கிறபோது, என்பெயர் வந்து அவுக பேரைப் போலத்தான் என்பாள். ஐயா பெயர் என்ன என்று கேட்டால், சங்கரன் கோயில் அம்மன் பேரு என்பாள். உறவினர் எவருடைய பெயராவது சங்கரன் பிள்ளை என்று இருந்துவிட்டால், அவள் தவசுக் கோயில் அம்மன் பேரு தான் அவுக பேரு என்று கூறுவாள். சங்கரன்கோயில் தெய்வம் கோமதிஅம்மன். அந்தக் கோயிலில் ஆடித்தபசுத் திருவிழா வெகு பிரசித்தம். எனவே அக்கோயில் தபசுக்கோயில் என்றும் சாதாரண ஜனங்களால் குறிப்பிடப்பட்டு வந்தது. சுப்பிரமணியன் அல்லது சுப்பையா என்ற பெயரைக் குறிப்பிட முடியாத நிலையில் உள்ள பெண், திருச்செந்தூர் கோயில் சாமி பேரு என்று சொல்வாள். இதில் சொல் உச்சரிப்பு சம்பந்தமாகக் கூடக் குழப்பம் ஏற்படுவது உண்டு. குப்புசாமி என்று ஒருவர் பெயர் இருந்தால், அதை சொல்லக் கூடாத நிலையில் இருக்கிற பெண் உப்பு என்று கூட உச்சரிக்க மாட்டாள். லவனம் என்றோ, அல்லது வேறு எதையாவதுசொல்லி உப்பை விளக்கப்படுத்துவாள். இவ் வழக்கம் பற்றி பெண்கள் சிலர் பேசிக்கொண்டிருந்த போது, ஒருத்தி தனது சாதுர்யத்தை பெருமையாக எடுத்துக்கூறினாள். அவள் மாமனார் பெயர் பிள்ளைக்கண்ணுப் பிள்ளை. ஆகவே அவள் பிள்ளை என்றும் சொல்லமுடியாது, கண்ணு என்றும் கூறக்கூடாது. அதனால் அவள் சிறுக குழந்தை எனக்கூறுவாள். உங்க அக்காளுக்கு குழந்தை பிறந்திருக்கா? என்ன குழந்தை சிறுசு நல்லாயிருக்குதா? என்று பேசிச் சமாளிப்பாளாம். கண்ணுக்கு பதில் நேத்திரம், பார்வை, விழி என்று குறிப்பிடுவாளாம். கன்று என்பதை ஜனங்கள் கன்னு என உச்சரிப்பது வழக்கம். எனவே, அந்த அம்மாள் கன்று (கன்னு) என்றும் சொல்ல மாட்டாள். அது கண்ணு என்ற பெயர் போல் ஒலிப்பதால், அதுக்கு 102 : வல்லிக்கண்ணன்