பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一器 9 路 1929 மே முதல் 1936 ஏப்ரல் வரை நாங்கள் பாளையங்கோட்டையில் வசித்தோம். இக்காலகட்டத்தில், நாங்கள் அநேகமுறை வீடு மாற்ற நேரிட்டது. முதலில், ரதவீதியை விட்டு விலகியிருந்த ஒரு சிறிய தெருவில் - உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு என்று அதற்குப் பெயர் - அய்யம்பெருமாள் பிள்ளை வீடு என்ற வீட்டில் குடிபுகுந்தோம். அது வசதியான தனிவீடு கீழே பல கட்டுகளும் விசாலமான மாடியும் கொண்டிருந்தது. அர்ச், சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் (செயின்ட் சேவியர்ஸ் ஹைஸ் கூலில்) நாங்கள் சேர்க்கப்பட்டோம் நான் ஐந்தாம் வகுப்பிலும் அண்ணன் கோமதிநாயகம் செகண்ட் பாரத்திலும், கல்யாணி அண்ணன் தேர்ட் பாரத்திலும் சேர்ந்து படிக்கலானோம். அப்பாவுக்கு நோய்கள் முற்றி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தால், அவர் வேலையிலிருந்து ஒய்வு பெற்று, வீட்டிலேயே இருந்து சிகிச்சைகள் பெற்று வந்தார். - அப்பா தொண்டிக்கு மாறுதல் பெற்றதுமே, சொந்தமாக இருந்த வண்டியையும் மாடுகளையும் விற்று விட்டார். இப்போது பாளையங் கோட்டையில் வசிக்க வந்ததும் வண்டி மாடு அவசியம் தேவை என்று அவர் கருதினார். கொக்கிரகுளத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த பாலகிருஷ்ண நாயக்கர் என்ற வைத்தியரிடம் சிகிச்சைக்காக அப்பா அடிக்கடி அங்கே போக வேண்டியிருந்தது. எப்பவாவது அபூர்வமாக நாயக்கர் வைத்தியர் எங்கள் வீட்டுக்கு வந்து மருந்துகள் தருவார். அவர் தனது சொந்த உபயோகத்துக்கென வில்வண்டி வைத்திருந்தார். மேலும், பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து ஒரு மைலுக்கும் அதிகமான தூரத்தில் இருந்தது. காலையில் 9 மணிக்குப் போய், மதியம் பன்னிரண்டரை மணிக்கு சாப்பாட்டுக்கு வரவேண்டும் பிறகு ஒன்றரை மணிக்கு மீண்டும் பள்ளி செல்ல வேண்டும் சாயங்காலம் நாலரை மணிக்கு பள்ளிவிட்டதும் திரும்பி வரவேண்டும். நிலைபெற்ற நினைவுகள் 3; 105