பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி தினசரி நான்கு முறை நடந்து போய் நடந்து வருவது எங்களுக்கு சிரமமாக இருக்கும் அதனால் வண்டி இருந்தால் போய் வர வசதியாக இருக்கும் என்று அப்பா கருதினார். ஆகவே, நல்லதொரு வில்வண்டியும், மாடுகளும் வாங்கப்பட்டன. ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இசக்கியா பிள்ளை என்பவர், மாதச் சம்பளத்தில், வண்டிக்காரராக அமர்த்தப்பட்டார். காலம் நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வருடம் இறுதிப் பரீட்சை முடிந்து, கோடை விடுமுறை வந்ததும், விடுமாற்றப் பட்டது. கோபாலசாமி கோயில் கீழரதவீதியை ஒட்டியிருந்த சிறு சந்தினுள் போனால் தென்படக் கூடிய மிகப் பெரிய வீடு கிடைத்தது. ஏட்டு ஜகநாதபிள்ளை வீடு என்று பெயர். முன்பிருந்த வீட்டைவிட அதிகமான அகன்ற அறைகளையும் பெரிய மச்சினையும் பெற்றிருந்தது. கம்பி ஆளி போட்ட பெரிய வராந்தா இருந்தது. அதற்கு முன்பக்கத்திலும் புறத்திலும் திறந்த வெளி மண்தரை, அதை ஒட்டி மேடான விசாலமான வெற்றிடம் அது வேறு யாருக்கோ சொந்தமானது. வீட்டில் புழங்குவதற்கும், வெளியே விளையாடுவதற்கும் ஏகப்பட்ட இடம் இருந்தது. வீட்டை ஒட்டியே மாடுகள் கட்டுவதற்கான தொழுவம் வசதியானது. வண்டி மாடுகள் இரண்டும், ஒரு பசுவும் தொழுவில் கட்டப் பட்டிருந்தன. அப்பாவின் நோய் குறையவில்லை. வைத்தியச் செலவுகள் அதிகரித்தன. கொக்கிரகுளம் நாயக்கர் வைத்தியரின் சிகிச்சை நின்றுவிட்டது. அப்பாவுக்கு முன்னரே அறிமுகமாகியிருந்த செல்லம் பண்டிதர் என்ற வைத்தியர் வீட்டுக்கு வந்து மருந்துகள் கொடுக்கலானார். - செல்லம் பண்டிதர் சுவாரசியமான நபர். நாவிதர் இனம் அந்நாள் களில் நாவித இனத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திய முறைகள் கற்று, பண்டிதர் என்று பெயர் வைத்துக்கொண்டு மருத்துவத் தொழில் புரிந்து வந்தார்கள் செல்லம் பண்டிதர் அனுபவசாலி கைராசி வைத்தியர் என்ற பெயரும் பெற்றிருந்தார். எல்லோரிடமும் இயல்பாகப் பேசிப்பழகக் கூடியவர். எங்களிடம் பிரியமாக இருந்தார். வைத்தியத்துடன், அவர் 136 3 வல்லிக்கண்ணன்