பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்குப் பெயர்பெற்றதாக விளங்கியது. ஒவ்வொரு கல்லூரி யிலும் ஹாக்கி ஆட்டத்தில் தேர்ந்த சேம்பியன்கள் பலர் இருந்தார்கள். ஹைகிரவுண்டின் பண்படுத்தப்பட்ட பரந்த மைதானத்தில் தான் ஏரோப்ளேன் வந்து நின்றது. பழைய மாடல் விமானம். அதன் இறகுகளின் அமைப்பே மிகப் பெரியதாக விநோதமாக இருந்தது. விமானத்தின் முன் பகுதியில் புரொப்பெல்லர் என்கிற காற்றாடியும் பெரிதாகவே அமைந்திருந்தது. தனியார் விமானம் அது. அதன் இறக்கையின் அடிப்பகுதியில் 'விடிஏஏகே' என்ற பெயர் பெரிய எழுத்துக்களில், பளிச்சிடும் வர்ணத்தில், ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்டிருந்தது. விமானம் உயரப் போய் பறந்தாலும், கீழே நிற்கிறவர்கள் அந்த எழுத்துக்களைப் படிப்பது சாத்தியமாக இருந்தது. விமானம் - அப்போது ஆகாயக் கப்பல் என்ற பெயரே அதிகம் அடிபட்டது - அவ்வப்போது மேலெழுந்து, சிறிது தொலைவு பறந்து விட்டு வந்து கீழிறங்கி நிற்கும். அது வேடிக்கை பார்ப்பதற்குக் கூடி நின்ற ஜனங்களுக்கு உற்சாகம் அளித்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அண்டை அயல் மற்றும் தூரத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டுவந்து விமானத்தைப் பார்த்து அதிசயித்தார்கள். . கும்பல் சாடுவதையும், அவர்கள் அடைகிற பிரமிப்பையும் கண்ட விமானச் சொந்தக்காரர்கள் அதை பணம் பண்ணுவதற்குச் சாதகமான வழியாக ஆக்கிக் கொண்டார்கள். விமானம் வந்து இறங்கிய மூன்றாவது நாளிலிருந்து, அவர்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். விமானம் நிற்பதற்கும், ஒடிப் பறப்பதற்கும் கணிசமான இடம் ஒதுக்கிவிட்டு, எட்டத்தில் சதுரமாக நான்கு பக்கங்களிலும் கம்பங்கள் நட்டு, முள்கம்பி வேலி போட்டார்கள். வேலிக்கு வெளியே நின்று யார் வேண்டுமாயினும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். உள்ளே போய் அருகில் நின்றும், சுற்றி வந்தும் விமானத்தைப் பார்ப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்து பணம் வசூலி த்தார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தால், விமானத்தினுள் ஏறிச் சென்று உள்புறத் தோற்றங்களைக் கண்டு களிக்கலாம் உட்காரும் ஆசனத்தில் அமர்ந்தும் மகிழலாம். பத்து ரூபாய் கொடுத்தால், ஒரு ட்ரிப் விமானத்தில் பறந்து நிலைபெற்ற நினைவுகள் 港 重37