பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவம் பெறலாம். ஹைகிரவுண்டிலிருந்து கிளம்பி விமானம் பாளையங்கோட்டை ஜங்ஷன், திருநெல்வேலிக்கு மேலே வானத்தில் பறந்து, பேட்டை வரை போய் திரும்பி வந்து சேரும் அவ்வாறு பணம் கொடுத்து அனுபவித்தவர்கள் மிக அதிகமாகவே இருந்தார்கள். கிராமங்களிலிருந்து தேர்த் திருவிழா பார்க்க வருவது போல அலங்காரம் செய்து கொண்டு வந்த பெண்கள் அநேகர் பத்து ரூபாய் கொடுத்து, விமானத்தில் அமர்ந்து பறக்கும் அனுபவம் பெற்று மகிழ்ந்தார்கள். பிறகு வெகுநாள்கள் வரை, நான் ஏரோப்ளானிலே ஏறிப் பறந்து பார்த்தேனே என்று பெருமையாகப் பேசி ஆனந்தித்தார்கள். அந்த விமானம் ஒரு வார காலம் ஹைகிரவுண்டில் முகாமிட் டிருந்தது. பின்னர் அது வேறு இடத்துக்குப் பறந்து போயிற்று மீண்டும் ஹைகிரவுண்ட் வெறிச்சோடிய வெம்பரப்பு மேட்டு நிலமாக அமைதியில் ஆழ்ந்து விட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டைக்கு இடையே பஸ் போக்கு வரத்து சர்வ சாதாரண நிகழ்வாக வளர்ந்திராத காலம் இரண்டே இரண்டு மோட்டார் கார்கள் தான் திரும்பத் திரும்ப ஒடிக் கொண்டிருக்கும். அவற்றை ஜனங்கள் கார் என்று தான் குறிப்பிட்டு வந்தார்கள். பஸ்' எனும் சொல் வழக்கத்துக்கு வந்திருக்கவில்லை. இரண்டு பஸ்களும் வெவ்வேறு கம்பெனியை சேர்ந்தவை. ஒரு கம்பெனி மோட்டார். பழைய மாடலில், கவர்ச்சியின்றி இருந்தது. அதன் மேல் முகப்பில் எம். எஸ். எம். சர்வீஸ் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. மற்றது. செல்வன் மோட்டார் சர்வீஸ் அந்தக் கம்பெனி பஸ் நேர்த்தியாகவும் வசீகர அமைப்பைக் கொண்டும் இருந்தது. - மாணவர்களும் மற்றவர்களும் செல்வன் மோட்டாரைப் பெரிதும் விரும்பினார்கள். பாராட்டிப் புகழ்ந்தார்கள். எம்.எஸ்.எம் சர்வீஸ் மோட்டாரை, முறுக்கு சுண்டல் மசால் வடை சர்வீஸ் என்று நையாண்டி பண்ணிக் களித்தார்கள். மண்டபத்தைச் சுற்றும் மோட்டார் சர்வீஸ் என்றும் எம்.எஸ்.எம் எனும் சொற்களுக்கு விரிவுரை கண்டு மகிழ்ந்தார்கள். அந்த மோட்டார், பாளையங்கோட்டை தெற்கு பஜார் வழியாக கோபாலசாமி கோயில் வரை வரும் அங்கிருந்த தேரடி மண்டபத்தைச் சுற்றித் திரும்பி ஓட்டத்தைத் தொடரும் செல்வன் பஸ் அவ்வாறு 138 ஐ வல்லிக்கண்ணன்