பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்வதில்லை. அதனாலேயே அந்த மோட்டாரை ‘மண்டபத்தைச் சுற்றும் மோட்டார் என்று ஜனங்கள் குறிப்பிட்டார்கள். மோட்டார் ட்ரைவர்களும் ரகம் ரகமானவர்கள் தான். அருணாசலம் என்று ஒரு காரோட்டி இருந்தார். அவர் திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோயில் முக்கிலிருந்து காரை ஓட்டத் தொடங் கியதும் ஹார்னில் ஒலி எழுப்பத் தொடங்குவார். விடாது ஹார்னை அமுக்கி அமுக்கி ஒசைப்படுத்தியபடியே பயணம் செய்வார். அதில் பாட்டுகள் ஒலிக்கும்படி செய்வார். ஜாலியான பாட்டுக்களாக இருக்கும் அவை. சாலையிலே ரெண்டு மரம் - சர்க்காரு வச்சமரம் - உனக்கேத்த தூக்கு மரம் - தங்கமத் தில்லாலே என்ற பாட்டும் தண்ணிக்குப் போ மகளே தலைகுனிந்து வா மகளே! மோட்டாரு ட்ரைவரைக் கண்டா முகம் கொடுத்துப் பேசாதடி தங்கரத்தினமே! அடி என் பொன்னு ரத்தினமே போன்ற பாடல்களும் அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. போகும் போதும், வரும்போதும், ஒவ்வொரு ட்ரிப்பிலும் அருணாசலம் இப் பாடல்களை ரசித்து ஹாரனில் ஒசைப்படுத்தியபடி செல்வார். எனவே, மற்றவர்கள் அவரைப் பாராட்டும் விதத்தில் ஆரன் சக்கிரவர்த்தி அருணாசலம் என்று பட்டம் அளித்து பெருமைப் படுத்தினார்கள். இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாந்தப்ப பிள்ளை கவனித்திருக்கிறார். ஒருமுறை, இப்படி இடைவிடாது ஹாரனை ஒசைப்படுத்தியபடி காரை ஒட்டக் கூடாது என்று அவர் அந்த ட்ரைவரை எச்சரித்தார். ஆனால் அருணாசலம் அவரது இயல்புப்படி ஹாரனில் பாட்டை ஒலித்தபடி தான் இருந்தார். சாந்தப்ப பிள்ளை கண்டிப்பான இன்ஸ்பெக்டர் என்று பெயர் பெற்றிருந்தார். சவுக்கும் கையுமாக சதா மோட்டார் பைக்கில் சுற்றிக் கொண்டே இருப்பார். பொது இடங்களில் தவறாக நடந்து கொள் கிறவர்களை, போக்கிரித்தனம் செய்கிறவர்களை, அந்த இடத்திலேயே சவுக்கால் அடித்து புத்திபுகட்டுவார். வாய்க்கால் பக்கம், ஆற்றங்கரை யோரம் அவ்வப்போது அவர் பைக்கில் காட்சி தருவார். பெண்கள் குளிக்கிற இடத்தில் ஆண்கள் வெறும் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு குளித்தால், சவுக்காலடித்து, ஏய், பொம்பிளைகள் நிலைபெற்ற நினைவுகள் 3; 139