பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிக்கிற இடத்தில் இப்படியா நிற்பது? துண்டு கட்டிக்கொண்டு குளி என்று அறிவுறுத்துவார். தெரு ஓரங்களில் பையன்களோ பெரியவர்களோ அசிங்கப் படுத்தினால், சாந்தப்ப பிள்ளை அவர்களை சவுக்கால் அடிக்கத் தயங்க மாட்டார். தெருக்களை அசுத்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துவார். சில பையன்கள் ரோடில் ஜாலியாக சைக்கிள் டயரை குச்சியால் அடித்து உருட்டியபடி விளையாடிச் செல்வார்கள். அதைக் கண்டால், சாந்தப்ப பிள்ளை சவுக்கைச் சுண்டுவார். அது சைக்கிள் டயரைச் சுருட்டி இழுக்கும். அதை அருகில் செல்கிற குப்பை வண்டியில் வீசிவிடுவார். ஏய், ரோடில் இது மாதிரி எல்லாம் விளையாடுவது ஆபத்து. ஜாக்கிரதையா, ஒழுங்காப் போ என்று ೯೬ಠJಣ67 எச்சரித்து அனுப்புவார். சாந்தப்ப பிள்ளை எந்த நேரத்தில், எந்தப் பக்கமிருந்து, எந்த ரோடில் வருவார் என்று எவருக்கும் தெரியாது. அவருடைய முரட்டுத்தனத்தையும் கூசாது சவுக்கடி கொடுக்கிற போக்கையும் கண்டு சகலரும் அஞ்சினார்கள். குற்றங்கள் குறைந்தன. சவுக்கடி சாந்தப்ப பிள்ளை என்றே ஊரார் அவரைக் குறிப்பிட்டார்கள். அவர் அருணாசலத்தை கண்காணித்தார். தான் சொல்லியும் அந்த ட்ரைவர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்று கண்டதும், அவர் அவனுக்குப் பாடம் கற்பிக்கத் தீர்மானித்தார். அடுத்த முறை அருணாசலம் ஹாரனைஅேமுத்தி ஓசை எழுப்பியபடி மோட்டாரை ஒட்டி வந்த போது, சாந்தப்ப பிள்ளையின் மோட்டார் சைக்கிள் பஸ் அருகே சென்றது. அவரது கைச்சவுக்கு பளிர் என மேலெழுந்தது. ட்ரைவர் கைமீது சுளிர் அடி பட்டதுடன், ஹாரனின் ரப்பர் உருண்டை பிய்ந்து வெளியே வந்து ரோடில் விழுந்தது. இன்ஸ்பெக்டர் எதுவும் நடவாதது போல் தனது வழியில் முன்சென்றார். அதிலிருந்து அந்த ட்ரைவர் ஒழுங்காக மோட்டாரை இயக்கிச் சென்றார். நான் நல்லவனுக்கு நல்லவன் துஷ்டனுக்குத் துஷ்டனாகி சரியானபடி பாடம் கற்பிக்கக் கூடியவன் என்று சாந்தப்ப பிள்ளை சொன்னதாக ஜனங்கள் பேசிக்கொள்வார்கள். சவுக்கடி சாந்தப்ப பிள்ளையின் கீர்த்தி ஜில்லா முழுவதும் பரவி 140 : வல்லிக்கண்ணன்