பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகளில் செய்திகளும் கட்டுரைகளும் படங்களும் மிகுதியாக இடம் பெற்று வந்தன. நான் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் வீடு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாங்கள் குடியிருந்த வீட்டின் அடுப்படிப் பகுதி பழுதுபட்டது. அந்த அறையை இடித்து விட்டுப் பெரிதாகக் கட்டினார்கள். வேறு சில பூச்சுமான வேலைகளும் நடந்தன. ஆகவே, அந்த வீட்டின் வாடகை அதிகமாக்கப்பட்டது. அவ்வளவு வாடகை கொடுக்க இயலாது என்பதாலும், அவ்வளவு பெரிய வீடு எங்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணத்தாலும், வேறு சிறிய வீடு பார்க்கப்பட்டது. இந்த வீடுரோடை ஒட்டியதாக எடுப்பாக இருந்தது. அதை ஒட்டிய சிறு முடுக்கு (சந்து) ஒன்றில், மூன்று வீடுகள் கொண்ட ஒரு வளைவு (வளவு - காம்பவுண்ட்) இருந்தது. அவற்றில் சிறிதாக இருந்த வீடு எங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டது. இதுவரை வசித்த காம்பவுண்டிலும் மூன்று வீடுகள் தான். தெற்கு ஒரத்து வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். அதற்கு முந்திய நடுவிட்டில் முதலில் வசித்த குடும்பம் - கடை வியாபாரி வைகுண்டம் பிள்ளை குடும்பம் - சிறிது காலத்தில் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போயிற்று. அந்தக் குடும்பம் மனித இயல்புகளை எடுத்துக்காட்டும் காட்சி சாலை போல் தோன்றியது எனக்கு வைகுண்டம் பிள்ளை மனைவி செல்லம்மாள் இளவயதுப் பெண் கொஞ்சம் நாகரிகமானவள். கணவன் அவளை கட்டுப்படுத்தி வைத்ததில்லை. அவளுக்கு ஒரு சிநேகிதி முடுக்கு வீடுகளில் ஒன்றில் வசித்தாள். சிவகாமி என்று பெயர். இரண்டு பேரும் வாய்க்காலுக்குத் தண்ணிர் எடுக்கப் போனால், சீக்கிரம் வீடு திரும்பமாட்டார்கள். வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசிச் சிரித்துப் பொழுது போக்கி மகிழ்வார்கள். இரண்டு பேருமே நல்ல ஜாலிடைப் ரப்பர் பாம்பு ஒன்றை குடத்துள் மறைத்து எடுத்துச் செல்வர். வாய்க்காலில் குனிந்து குடத்தில் தண்ணீர் நிரப்பும் போது, பாம்பு பொம்மையை எடுத்து தண்ணில் போடுவார்கள், ஐயோ, பாம்பு பாம்பு என்று ஒருத்தி கூச்சலிடுவாள். மற்றவளும் இதோ பாம்பு, இந்தா வருது, அந்தா போகுது என்று கலவரப்படுத்துவாள். அண்டை அயலி ல் நிற்கிற பெண்கள் பயந்தடித்து படிகளில் ஏறிப் பரபரப்பார்கள். இப்படி காபுராப்படுத்தி களிப்படைந்தபிறகு ஒருத்தி துணிச்சலாக தண்ணிப் பாம்பு தான். பயம் எதுக்கு என்று சொல்லி அதைப் 156 : வல்லிக்கண்ணன்