பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகளுக்கு சந்தா கட்டியிருந்தார். அவை தபாலில் வந்தவுடன் அவற்றைப் படித்து விட்டு, எங்களுக்குப் படிக்கத் தருவார். ஆனந்த போதினி மாதப் பத்திரிகை அந்நாள்களில் வெளிவந்த இலக்கியப் பத்திரிகை, அக்காலத்தில், இலக்கியம் என்றால் கம்ப ராமாயணமும், திருக்குறளும் தான் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டு வந்தன. தமிழுக்கே கதி இவ்விரண்டும் தான் என்று பண்டிதர்கள் அடித்துப் பேசி வந்த காலம். ஆகவே, இலக்கியக் கட்டுரைகள் எழுது கிறவர்கள் கம்பராமாயணம் திருக்குறள் இவ் இரண்டைப் பற்றியுமே எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனந்த போதினியில் ராபி சேதுப்பிள்ளை எழுதிய ராமாயணக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தூத்துக்குடி எஸ். பால் நாடார் ராமாயணப் பொருள்கள் குறித்த கட்டுரைகள் எழுதுவதில் பெயர் பெற்றிருந்தார். கதைகளும் இடம்பெறும் அவை சாரமற்ற பழைய பாணிக் கதைகள். ஆனந்த விகடன் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு முன்னர், எஸ்.எஸ். வாசன் ஆனந்த போதினியில் தொடர் கதைகளும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தார். மஞ்சள் அறை மர்மம்' என்பது அவர் எழுதிய தொடர் கதைகளில் ஒன்று. அவர் அந்தக் காலத்தில், இல் வாழ்க்கையின் இன்பரகசியங்கள் (தி மிஸ்டரீஸ் ஆஃப் வெட்டட் லைஃப்) என்றொரு செக்ஸ் நூலும் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். 1930களின் ஆரம்பத்தில், எஸ்.எஸ். வாசன், ஆனந்த விகடன் பத்திரிகையை வாங்கி சொந்தமாக நடத்தலானார். பூதலூர் வைத்தியநாத அய்யர் என்பவர் விகடப் பத்திரிகையாக அதை நடத்திக் கொண் டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு மேல் அவரால் ஆனந்த விகடனை நடத்த முடியவில்லை. எனவே அதை அவர் விற்று விட்டார். எஸ்.எஸ். வாசன் ஆனந்த விகடன் இதழை முதலில் மாதப் பத்திரிகையாக நடத்தினார். பிறகு அது மாதம் இருமுறை இதழாக மாறியது. விரைவிலேயே மாதம் மும்முறை என்றாகி, பின்னர் வாரப் பத்திரிகையாக வளர்ச்சிப்பெற்றது. அவ்விதம் வளர்ச்சி பெறுவதற்காகப் பல்வேறு வியாபார விளம்பர உத்திகளையும் வாசன் கையாண்டார். ஒவ்வொரு இதழிலும் ஒரு எண் அச்சிடப்பட்டிருக்கும். மாதமுடிவில் அதிர்ஷ்டப் பரிசு முறையில், தேர்ந்தெடுக்கப்படும் மூன்று எண்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் 166 38 வல்லிக்கண்ணன்