பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு காலேஜ் படிப்பு படிப்பதற்கு வசதியில்லை. ஆகவே விட்டோடு இருக்க வேண்டியதுதான் என்ற நிலைமையே முன்னின்றது. வீட்டோடிருந்து என்ன செய்வது? வேறு என்ன செய்ய முடியும்? இத்தனை வருட காலமும் செய்து வந்தது போல, படிப்பதைத் தான் தொடரமுடியும். ஆகவே கண்டதையெல்லாம், கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்கலானேன். அப்படிப் படிப்பதற்கு புத்தகங்கள் மிகுதியாகவே கிடைத்துக் கொண்டிருந்தன. ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி மரகதமணி விக்கிரமாதித்தன் கதைகள் மதன காமராஜன் கதைகள் போன்ற எனக்கு முந்தியதலைமுறையினர் பொழுதுபோக்குவதற்கென்று வாசித்துப் பழகிய புத்தகங்கள் கிடைத்தன. அக்காலத்திய நாவலாசிரியர் களான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள், ஜே.ஆர். ரங்கராஜு, எஸ்.எஸ். அருணகிரிநாதர் முதலியவர்கள் எழுதிய நாவல்கள் கிராமங்களில் கூட செல்வாக்கு பெற்றிருந்தன. அவையும் படிப்பதற்குக் கிடைத்தன. எங்களுக்கு அண்ணாச்சி உறவினரான ஒருவர் - பெயர் ராஜ கோபாலகிருஷ்ண பிள்ளை - படிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தார். அவருடைய அண்ணாச்சி ஆறுமுகம் பிள்ளையும் நாவல்கள் வாங்கிப் படிப்பதில் அக்கறை கொண்டிருந்தார். இவர்கள் சொத்து உடையவர்கள். ஆறுமுகம் பிள்ளை பண்ணையார் என்று குறிப்பிடப் பட்டு வந்தார். அவர் புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கிப் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது ஆச்சரியமான விஷயம்தான். ஆறுமுகம் பிள்ளையிடம் ஒரு விசித்திரகுணம் இருந்தது. எந்தப் புத்தகம் அல்லது பத்திரிகையைப் படித்தாலும், அதை முடித்ததும் இறுதியில் முற்றிற்று என்று எழுதி கையெழுத்திட்டு வைப்பார். அதற்கு அவர் காரணமும் சொல்வார். இப்படி எழுதி வைக்காவிட்டால், எந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தாச்சு, எதைப் படித்தாகவில்லை என்றே தெரியாமல் பிறகு ஒரு சமயத்தில், படித்த புத்தகத்தையே எடுத்துத் திரும்பவும் படிக்க நேரிடும். அது வீண்வேலை கால நஷ்டம் அதைத் தவிர்ப்பதற்காகவே இப்படி முற்றிற்று என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு வைக்கிறேன் என விளக்குவார். ஆறுமுகம் பிள்ளை ஆனந்த போதினி பிரசண்ட விகடன் ஆகிய நிலைபெற்ற நினைவுகள் 3 165