பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமாயணம் என்ற தலைப்பில் முழுமையாகவும் விரிவாகவும் கம்ப ராமாயணத்தின் சிறப்புகளையும் நயங்களையும் விவரிக்கும் கட்டுரை களை எழுதினார் பியூரீ. இத் தொடர் பல வருடங்கள் நீண்டது. ஒவியர் சித்திரலேகா புதிய பாணிச் சித்திரங்கள் தீட்டி இத் தொடரை அணி செய்து வந்தார். பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களை சுவையான கதைகள் போல் விளக்கி பியூரீ, சிறுசிறு கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார். வாரம் தோறும் அக் கட்டுரைகளுக்கேற்ற ஒவியம் அட்டைப் படமாக அச்சிடப் பெற்று வந்தது. வாசகர்களில் பலருக்கு தமிழ் இலக்கியச் செல்வங்களை அறிமுகம் செய்து உதவின. இக் கட்டுரைகள். நாங்கள் ராஜவல்லிபுரத்தில் வசிக்க வந்த பின்னரும், அண்ணன் கோமதி நாயகத்தின் பள்ளிச் சிநேகிதன் ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கத் தந்து கொண்டிருந்தான். பதினைந்து அல்லது இருபது நாள்களுக்கு ஒரு முறை அண்ணனும் நானும், ஆற்றைக் கடந்து அக்கரை சேர்ந்து நடந்தே பாளையங்கோட்டை போய், திருவனந்தபுரம் ரோடில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போய் விகடன், மை மேகசின் இதழ்களை இரவலாகப் பெற்று வந்தோம் போக நான்கு மைல்கள், வர நான்கு மைல்கள். அப்படி எட்டு மைல்கள் நடந்தது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியதில்லை. இனிய உலாவாகத் தான் அமைந்திருந்தது. அது. . சில மாதங்களுக்குப் பிறகு நண்பன் வீட்டில் ஏதோ பிரச்சினைகள் தோன்றி விட்டன. அவன் எங்களுக்குப் பத்திரிகைகள் தந்து, திரும்பப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றியதாகப் புலப்பட்டது. அவன் தயங்கித் தயங்கி நிலைமையைக் கூறினான். அவனுக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது என்ற எண்ணத்தில், நாங்கள் அவனிடம் உதவி பெற்றதை நிறுத்திக் கொண்டோம். இனி நாமே விகடன் வாங்கலாம் என்று அண்ணன் முடிவு செய்தார். அப்போது விகடன் விலை இரண்டனர். திருநெல்வேலி ஜங்ஷனுக்குப் போய், அங்குள்ள பத்திரிகை ஏஜன்ட் கடையில் வாங்குவது என்று தீர்மானித்தோம் ஆற்றங்கரைப் பாதை வழியாக நடந்து போய் நடந்து திரும்புவது என்றும் திட்டமிட்டோம். ராஜவல்லிபுரத்திலிருந்து செப்பறை ஆற்றுக்கு ஒருமைல் தூரம் ஆற்றங்கரை மீதே இரண்டரை மைல்கள் நடந்தால் சிந்துபூந்துறை என்ற 158 :ே வல்லிக்கண்ணன்