பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையிலும் மாலையிலும் வயலின் வரப்புகளின் மீது நடந்து சுற்றிப் பார்ப்பார். அறுவடையாகி வரும் நெல் முழுவதும் அவருக்கே உரியது. உழைத்த தொழிலாளர்களுக்கு பூவுக்கு இவ்வளவு நெல் என்று வழங்கப்படும். இப்படியாக கிராமங்களில் விவசாயம் நடந்து வந்தது. அறுப்பு முடிந்து கிடைத்த நெல்லை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்து, நெல்லுக்கு நல்ல விலை வருகிற காலத்தில் வியாபாரிகளிடம் அதை விற்றுப் பணமாக்கிக் கொண்டார்கள். அந்தப் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தினார்கள். சந்தர்ப்பம் கிட்டுகிற போது பல ஊர்களுக்கும் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் அவர்களுக்கு வந்ததில்லை. அவர்களில் பலர் மதுரைக்குக் கூடப் போனதில்லை. மதுரைக்குப் போய் பார்ப்பது என்பது வாழ்வில் சாதிக்கப் படக் கூடிய அரிய செயலாகத் தோன்றும் அவர்களுக்கு அது சம்பந்தமாக வாய்மொழி வழக்கு ஒன்று அடிக்கடி சொல்லப்பட்டதும் உண்டு. ஒருவர் இறந்து மேல் உலகம் சேர்ந்ததும் அவருடைய ஆத்மாவிடம் எமலோகக் கணக்கர் சித்திரகுப்தர் கேட்பாராம். நீ மானுர் அம்பலம் தரிசித்தது உண்டு மதுரையைக் கண்டு மகிழ்ந்தது உண்டா? என்று. இல்லை என்று சொன்னால் ஆத்மாவின் கணக்கில் குற்றம் குறையாக அது பதிவு செய்யப்படுமாம். அப்படிப்பேசிக் கொண்டாலும் கூட நாலு இடங்களுக்குப் போய் நல்ல காட்சிகளைப் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் அந்த ஊர்காரர்களுக்கு ஏற்பட்டதேயில்லை. அவர்கள் வெளியூர் போக வேண்டுமானால், உற்றார் உறவினர் வீட்டில் கல்யாண விசேஷம் அல்லது சாவு காரியம் நிகழ வேண்டும். இந்த இரண்டு விசேடங் களுக்கும் கட்டாயம் போயே தீரவேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. திருநெல்வேலிக்குக் கூட அவ்வூர்காரர்கள் அடிக்கடி போனதில்லை. உல்லாசப் பிரியர்களான இளைஞர்கள் சிலர் - வசதிகள் படைத்த வீட்டுப்பிள்ளைகள் - மாதத்துக்கு ஒன்றிரண்டு தடவை டவுணுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மாலையில் சினிமா பார்த்துவிட்டு, இரவில் மாடத் தெருவில் நிலைபெற்ற நினைவுகள் : 173