பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகம் பிள்ளையும் அவ்விதமே செய்தார். பிறகு, அவர் குடும்பத்தோடு வசிப்பதற்கு ஏற்ற வீடு கட்டிக்கொண்டு சத்திரம் குடியிருப்பிலேயே வாழலானார். - ராஜகோபாலகிருஷ்ணன் ஒருசமயம் ராஜவல்லிபுரம் வாலி பர்களுக்கும் பையன்களுக்கும் படிப்பில் ஆர்வம் ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு நடுத்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அங்கு வாசகசாலை நிறுவினார். தன்னிடமிருந்த புத்தங்கள், பழைய பத்திரிகைகளை எல்லாம் அங்கே கொண்டு வந்து ஒழுங்குபடுத்தி வைத்தார். இரண்டு பெஞ்சுகள், சில நாற்காலிகள், ஒரு மேசை ஆகியவற்றையும் கொண்டு வந்து சேர்த்தார். கட்டபொம்மன் வாசகசாலை என்று பெரிய எழுத்தில் ஒரு அட்டையில் எழுதி வீட்டின் முகப்பில் மாட்டி வைத்தார். புதிய பத்திரிகைகளும் வாங்கிப் போட்டார். அவருக்கிருந்த உற்சாகமும் படிப்பார்வமும் ஊர் இளைஞர் களுக்கும் பையன்களுக்கும் இல்லை. அதனால் வாசகசாலை படிக்க வருவோர் இல்லாது துரங்கி வழிந்தது. நாளடைவில் தான் செய்வது வெட்டிவேலை வீண்முயற்சி என்பதை உணர்ந்து கொண்டார் அண்ணாச்சி. எனவே வாசகசாலையை மூடிவிட்டார். என் அண்ணன்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை, எல்லோரும் கூடிவம்பளந்து பொழுது போக்குகிற அறையிலேயே கழித்தனர். இரவில் ஒன்பது பத்து மணி வரை சந்திப் பேச்சில் கலந்து கொண்டனர். நான் சின்னப் பையன். வீட்டிலேயே இருந்து படிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டிருந்தேன். நானும் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேகம்பெற்று வந்தது. மனசுக்குத் தோன்றியதை எல்லாம் எழுதினேன். அதற்காகவே இதய ஒலி என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தேன். இதய ஒலியில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினேன். படங்களும் நானே வரைந்தேன். ஆனால் நான் மட்டுமே அதன் வாசகர் என்ற நிலைமை இல்லை. என் அண்ணன்கள் படித்தார்கள். பொழுது போக்கும் அறைக்கு அதை எடுத்துப் போய் மற்றவர்களையும் படிக்கச் செய்தார்கள். ராஜவல்லிபுரத்துக்குக் கிழக்கே சில மைல்கள் தள்ளி உள்ள சீவலப்பேரி, மடத்துப்பட்டி என்ற கிராமங்களைச் சேர்ந்த இரண்டு 175 : வல்லிக்கண்ணன்