பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல ஆபீசுகளும் இருந்த பகுதியில், தனித்த நான்கு வீடுகள் கொண்ட ஒரு வரிசையில், முதல் வீட்டில் சர்க்கார் விவசாய ஆபீஸ் (கவர்ண்மென்ட் அக்ரிகல்சுரல் டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீஸ்) இருந்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த அலுவலகம் என் அண்ணனுடன் நான் போய்ச் சேர்ந்த நாளில், அந்த ஆபீசில் ஒரே ஒரு ஆள் தான் இருந்தார். மெசஞ்சர் என்று அழைக்கப்பட்ட பணியாள். மேலதிகாரி (டிமான்ஸ்ட்ரேட்டர்) லீவில் திருமங்கலம் போயிருக்கிறார் என்றும் இன்னும் மூன்று நாள்களில் வந்து விடுவார் என்றும் அந்தப் பணியாள் தெரிவித்தார். நாங்கள் ஆபீசிலேயே தங்கலாம் என்றார். அவரும் தற்காலிகமாக அலுவலகத்தில் தான் தங்கியிருப்பதாகவும், வீடு பார்த்தாச்சு பெரியகுளம் போய் குடும்பத்தை கூட்டி வரவேண்டும் என்றும் தகவல் சொன்னார். கட்டிடமும் புதுசாகத் தான் இருந்தது. இரண்டு மேஜைகள், நாற்காலிகள், பெஞ்சுகள் எல்லாமே புதுமைப் பொலிவுடன் மினுமினுத்தன. ஆபீசுக்கு அடுத்ததாக ஒரு ஒட்டல் இருந்தது. வீடு மாதிரியான தோற்றமே கொண்டிருந்தது. அது கல்லிடைக் குறிச்சி ஐயர் ஒருவர் - கிருஷ்ணய்யர் என்று பெயர் - அதை நடத்தி வந்தார். விதவை யான அக்காள் அவருக்கு உதவியாக உழைத்துக் கொண்டிருந்தாள். அக்காள் மகளைத் தான் அவர் மணம் புரிந்திருந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. கைக்குழந்தை ஹோம்லி அட்மாஸ்பியர் என்பார்களே, அப்படியான வீடு போன்ற சூழலும் தன்மையும் கொண்டிருந்தது. கிருஷ்ணய்யர் ஒட்டல், அவர் தடி உருவமும், சிறு அளவு தலைமுடியும், சிரித்துப் பேசும் இனிய சுபாவமும் கொண்ட மனிதராக இருந்தார். வாடிக்கையாக அநேகர் அங்கு சாப்பிட்டுச் சென்றார்கள். எனக்கும் அங்கேயே சாப்பாட்டு வசதிக்குப் பதிவு செய்யப் பட்டது. காலை நேரத்தில் இட்டிலி, தோகை காப்பி, மத்தியானம் சாப்பாடு இரவிலும் சாப்பாடு. மாதம் பத்து ரூபாய். ஆனாலும், நம்ம திருநெல்வேலிப் பக்கமாக இருப்பதாலும் அமைதியானதல்ல பையனாக இருப்பதாலும், மாதம் ஒன்பது ரூபாய் தந்தால் போதும் என்று கிருஷ்ணய்யர் அன்புடன் கூறினார். நீ கவலைப்படவே வேண்டாம்; தம்பியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என் அண்ணனிடம் அவர் உறுதி கூறினார். 186 3 வல்லிக்கண்ணன்