பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் போய்ச்சேர்ந்த மூன்றாம் நாள், மேலதிகாரி கணேசய்யர் வந்து சேர்ந்தார். முறைப்படி என்னை உத்தியோகத்தில் சேர்த்துக் கொண்டார். மறுநாள் என் அண்ணன் திருநெல்வேலிக்குப் # ##-#Gğği İs}{G Gð; f; ff". அந்தத் தாலுகாவில் புதிதாகத் துவக்கப்பட்டிருந்த விவசாய ஆபீஸ் அது டிமான்ஸ்ட்ரேட்டர் மாதத்தில் இருபது நாள்களுக்கும் அதிக மாகவே, பல ஊர்களுக்கும் சென்று விவசாய முன்னேற்றத்துக்கான ஆலோசனைகளை கிராம மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். விவசாய ஆபீசில் கிடைக்கக் கூடிய நல்ல விதைகளை விலைக்கு வாங்கிப் பயிர் செய்ய வேண்டும். இரும்புக் கலப்பை வாங்கி உழவேண்டும். இவற்றை எல்லாம் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, கலப்பை வாங்குவதற்காகக் கொடுக்கப்படும் கடன் தொகையை அவர்கள் பெறுவதற்கு உதவி இரும்புக் கலப்பையை வரவழைத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். விவசாய ஆபீசர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பணிகள் இவை. அவருக்கு உதவியாள்களாக மேஸ்திரி என்று ஒருவரும் மெசஞ்சர் என ஒருவரும் உண்டு. மேஸ்திரி தனியாக ஊர்ஊராகப் போய் பிரசார அலுவல்களில் ஈடுபடவேண்டும் மெசஞ்சர் ஆபீசரோடு உதவியாகப் போய் வருவார். பரமக்குடியில் முதன்முதலாக அப்போது தான் விவசாய ஆபீஸ் திறக்கப்பட்டிருந்ததால், அலுவல்கள் எவையும் முறைப்படி செய்யப் படவில்லை. மேஸ்திரி பேருக்கு ஏதோ அந்த ஊர் போனேன். இந்த ஊர் போனேன் என்று டயரி எழுதிவிடுவார். ஆபீசர் அதற்கும் மேலே அவர் குடும்பம் திருமங்கலம் ஊரில் வசித்தது. திருமணம் ஆக வேண்டிய நிலையில் ஒரு பெண்ணும், படிக்கும் பையன் ஒருவனும் இருந்ததாகச் சொன்னார். மகள் கல்யாணத்துக்காக முயற்சிகள் செய்து கொண்டிருந்ததால் அவர் அடிக்கடி விடுப்பில் திருமங்கலம் போய் விடுவார். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு லீவ் (விடுப்பு) விஷயத்தில் பல வசதிகள் இருந்தன. கேஷவல் லீவ் பிரிவிலேஜ் லீவ், லீவ் ஆன் மெடிகல் சர்டிபிகேட் லீவ் ஆன் ஆவரேஜ் பே, லீவ் ஆன் லாஸ் ஆவ் பே என்று வருடத்தில் பெரும்பாலான காலத்தை அவர்கள் லிவிலேயே கழிக்க முடியும் நிலைபெற்ற நினைவுகள் 9 187