பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நித்தியானந்தம் தனியனாக வசித்தார். ஒட்டலில் சாப்பாடு மேலே இன்ஸ்டிடியூட்டிலேயே படுக்கை எல்லாம். நான் டைப் கற்கச் சேர்ந்து, அவருடன் பழகி நண்பனானதும், என்னையும் அந்த மாடியிலேயே தங்கியிருக்க அனுமதித்தார் அவர். சில மாதங்களுக்குப் பிறகு நித்தியானந்தம் டைப் இன்ஸ்டிடியூட்டை வேறு இடத்துக்கு வசதியான ஒரு பெரிய வீட்டுக்கு மாற்றினார். நானும் அங்கேயே தங்குவதற்காகப் போய்ச் சேர்ந்தேன். கீழ்ப்பகுதியில் மூன்று அறைகள் இருந்தன. மாடியிலும் விசாலமாக இடம் கிடந்தது. அதனால் மற்றும் இரண்டு பேர்கள் அங்கு தங்கியிருக்க வந்து சேர்ந்தார்கள். பள்ளி ஆசிரியர்கள். டைப் கற்றுக் கொள்வதற்கு என்று மாணவர்களும் பலவிதமான டைப் வேலைகளுக்காக (பத்திரங்கள், மனுக்கள் போன்றவற்றை டைப் செய்து வாங்கிப் போவதற்காக அநேகரும் வந்து போகிற இடமாக அது அமைந்திருந்தது. சும்மா பேசிப் பொழுது போக்கு வதற்காக படித்து விட்டு வேலை இல்லாதிருந்த வாலிபர்கள் சிலரும் வந்து அங்கேயே வெகு நேரம் தங்கி, காலக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அந்த இடம் எப்போதும் கலகலப்பாக இருந்தது. எதிர் சாரியிலிருந்த குடும்பத்தினர், டாக்டர் வக்கீல் வகையரா - அந்த இடத்தை பிரமச்சாரிகள் மடம் (பேச்சலர்ஸ் டென்) என்று குறிப்பிட்டுப் பேசினார்கள் என்றும் தெரியவந்தது. பலவிதமான மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் அறிந்து கொள்வதற்கு அந்த இடம் எனக்கு உதவியது. எனது படிப்பு ஆர்வத்தை அறிந்த சிலர் நல்ல நல்ல புத்தகங்களை எனக்குக் கொடுத்து உதவினார்கள். கே. எஸ். வேங்கடரமணியின் ஆங்கில நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. கிராம சீர்திருத்தத்திலும் காந்தீய வழிமுறைகளிலும் நம்பிக்கை கொண்டிருந்த வக்கீல் கே. எஸ். வேங்கடரமணி ஆங்கிலத்தில் பலவிதமான சிந்தனை நூல்கள் எழுதியிருந்தார். ஆன் தி சேன்ட் ட்யூன்ஸ் (மணல் மேடுகள் மீதிருந்து), பேப்பர் போட்ஸ் (காகிதப் படகுகள்), தி நெக்ஸ்ட் ரங்க் ஆஃப் தி லேடர் (ஏணியின் அடுத்த படி) போன்ற கட்டுரை நூல்கள் முருகன் தி டில்லர் (முருகன் ஒர் உழவன்) 192 : வல்லிக்கண்ணன்