பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தா போன்றவர்களின் உபதேசங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். பிரமச்சாரியாகவே வாழ்வது என உறுதி பூண்டிருந்தார். அவர் ஒரு யோசனையை முன்வைத்தார். நாம் ஐந்து பேர் இருக்கிறோம் ஐந்து பேரும் ஒட்டலில் தான் சாப்பிடுகிறோம். ஒட்டலி ல் சாப்பிடுவதை விட நாமே ஒரு ஆளை ஏற்பாடு செய்து, வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம். சுசிருசியாக நமக்கு வேண்டியவற்றை செய்து கொள்ள முடியும் செலவும் குறையும் ஒட்டலுக்குக் கொடுக்கிற அளவு பணம் நமக்கு இங்கு ஆகாது என்றார். நல்ல யோசனை தான். இந்த வீட்டிலும் சமையல் அறை எல்லாம் வசதியாக இருக்கு சமையல் வேலைகளை கவனிப்பதற்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டுமே என்று நித்தியானந்தம் சொன்னார். அது ஒரு பிரச்சினை இல்லை. ஊரில் என் தம்பி இருக்கிறான். நன்றாக சமையல் வேலைகள் செய்வான். ஒட்டலில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவன். அவனை நான் வரவழைக்கிறேன். அவனுக்கு சம்பளம் அதிகம் தரவேண்டியதில்லை என்று ராம குப்தா கூறினார். அப்படியே செய்யலாம் என்று முடிவு ஆயிற்று. ராம குப்தாவின் தம்பி ஊரிலிருந்து வந்து சேர்ந்தான். தேவையான பாத்திரங்கள், பொருள்கள் பலவும் வாங்கப்பட்டன. ஒரு நல்ல நாளில் வீட்டு உணவுத் திட்டம் செயல்படத் துவங்கியது. தண்ணிர் எடுத்துவர, வீடு பெருக்க என்று ஏற்கனவே ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்யும் பொறுப்பும் அவளைச் சேர்ந்ததாயிற்று. எல்லாம் சுமுகமாக, நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று மாதங்கள் நல்லபடியாகவே கழிந்தன. அது மேலும் தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் தம்பி குப்தாவின் போக்கு கோளாறானதாக மாறியிருந்தது. அவன் தனது இயல்பான சுறுசுறுப்பை இழந்தான். சோர்ந்து சோர்ந்து படுத்துக் கிடப்பதில் அதிக ஆர்வம் காட்டினான். சமையல் வேலைகள் செய்வதில் உற்சாகமில்லாதவனானான். அவனுக்கு ஏதோ வியாதி ஏற்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் புரிந்தது. அந்தத் தெருவிலேயே மலையாள டாக்டர் ஒருவர் வெற்றிகரமாகத் 194 38 வல்லிக்கண்ணன்