பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் புரிந்து கொண்டிருந்தார். பொம்பிளைசீக்கு ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்றவர். டைப் இன்ஸ்டிடியூட் இருந்த தெருவின் தொடர்ச்சியாக அமைந்திருந்த சின்னத் தெரு அந்தியிலும் இரவுகளிலும் இன்பத் தொழில் நடத்தும் பெண்கள் வசித்த பகுதியாகும். வீடுதோறும் விதம்விதமான பெண்கள் சிங்காரித்தபடி நின்று, தொழிலுக்கான துண்டில் வீசிக் காத்திருக்கும் பிரதேசம் - அந்தத் தெருவுக்கும் டைப் இன்ஸ்டிடியூட் தெருவுக்கும் இடைப்பட்ட ஒரு கட்டிடத்தில் தான் அந்த டாக்டர் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து ஜாலி யாக அரட்டை அடிப்பது வழக்கம் அவர் தம்பி குப்தாவை பார்த்ததும், பையனும் வாங்கிவிட்டான் போலிருக்கே என்று கூறிச் சிரித்தார். எதை வாங்கினான் என்று அப்பாவித்தனமாக ராம குப்தா விசாரித்தார். இந்த ஏரியாவிலே மலிவாகக் கிடைக்கிற பொம்பிளை சீக்கைத் தான். பையன் இந்த வட்டாரத்துப் பொம்பிளை எவ கிட்டேயோ போயி வசமாக மாட்டிக்கிட்டான் என்று தமாஷாகப் பேசினார் டாக்டர். - அது தான் உண்மை என்று புரிந்தது. டாக்டர் பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் செய்தார். ஒழுக்க சீலரான அண்ணன் ராமகுப்தாவுக்கு இது பெரும் அதிர்ச் அளித்தது. தம்பி இப்படி நடந்து கொள்வான் என்று அவர் எண்ண யில்லை. அவர் கோபம் கொண்டார். உடனடியாக بانك) بسالات هناصراع களோடு ஊர் போய்ச்சேர் என்று தம்பிக்கு உத்திரவிட்டார். வேண்டிய வற்றை அவசரம் அவசரமாகச் செய்து அவனை அனுப்பி வைத்தார். அவன் போனதோடு, வீட்டுச் சமையல் ஏற்பாடும் முடிவு அடைந்தது. மூன்று மாத வாழ்வு அப்புறம் மீண்டும் ஒட்டல் சாப்பாடு தான் வாய்த்தது ஐவருக்கும். ஆபீசிலும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன. நான் வந்து சேர்ந்த சமயம் மெசஞ்சராகப் பணிபுரிந்த ராமசாமி நாயுடு, நிலைபெற்ற நினைவுகள் ே of 95