பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவந்தமாக அனுபவிக்க ஆசைப்பட்டார்கள் வெறியர்கள். ஆனால் திருமணமான பெண்களை அவர்கள் ஒதுக்கினார்கள். இளம் பெண்களை மணம் புரிந்து கொள்ள ஆக்கிரமிப்பாளர்கள் ஆசைப்பட்டார்கள். அப்படி அவர்கள் விரும்பிக் கேட்ட பெண்களை பெற்றோர்களே இரக்கமின்றி எவ்விதத்திலாவது கொன்றுவிட்டு, இரவோடு இரவாக உற்றமும் சுற்றமுமாக அனைவரும் ஊரைவிட்டு வெளியேறி தெற்குப் பிரதேசங்களில் குடியேற முனைந்தார்கள். தெற்குப் பகுதியில் குடியேறியதாகக் கூறப்படுகிற ஒவ்வொரு இனத்தாரும் இது போன்ற வாய்மொழி வரலாற்றைக் கூறுவது தமிழ்நாட்டில் சகஜமாக உள்ளது. அதே போல் தான் கோட்டைப் பிள்ளைமார் வரலாறும் பேசுகிறது. அப்படித் தப்பி வந்த ஒரு இனத்தார் பாதுகாப்பாக வாழ்வதற்காகக் கோட்டை கட்டிக் கொண்டார்கள். பெண்களை கோட்டைக்குள் காவல்கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி செய்தார்கள். பெண்கள், சிறுமிகள் கூட வெளியே வரக்கூடாது. கோட்டைக்குள்ளேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டிக் கொண்டு வாழ்க்கை நடத்தி செத்தும் போவார்கள். ஆண்கள் தாராளமாகத் திரியலாம். வெளியூர்கள் போய்வரலாம். படித்துத் தேறி வேலைகளில் அமரலாம். கோட்டைப் பிள்ளைமார் களில் ஆண்களில் கல்லூரிப் படிப்பு படித்தவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் இருந்தார்கள். கோயம்புத்துர், திருச்சி, சென்னை என்று போய் வந்தார்கள். ஆனால் பரந்த நோக்கும் விசால மனமும் பெறாதவர் களாக தங்கள் இனப் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள். பெண்களில் சிலர் எழுதப் படிக்கக் கற்றிருக்கக்கூடும். அதற்கு கோட்டைக்குள் வெளிஉலகப் பெண்கள் ஆசிரியைகளாகப் போய் வந்திருக்கக் கூடும். ஆயினும் கோட்டைப் பெண்கள் அதிகம் கல்வி கற்றதில்லை. பரிதாபத்துக்கு உரியவர்கள் அவர்கள். வெளி உலகத்தை அதன் இனிமைகளை, அழகுகளை மாறுபட்ட தோற்றங்களை அவர்கள் கண்டதில்லை. கோயில், குளம், தேர், திருவிழா, திருமணம் போன்ற வெளிஉலக விசேஷங்கள் எதையும் அப்பெண்கள் அறிந்ததில்லை. கார், பஸ், ரயில் வண்டித் தொடர் போன்ற வேக ஊர்திகளை அவர்கள் கண்டதில்லை. ஒடும் தண்ணீர், பக்கத்தில் நகர்ந்து சென்ற ஆறு, அதன் நிலைபெற்ற நினைவுகள் : 221