பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவில் அமைந்திருந்த உருண்டைச் செம்பு அது. பொன்முலாம் பூசப்பட்டிருந்த அச் செம்பில் தெய்வ உருவம் பதிக்கப்பட்டிருந்தது. நன்கு கவனித்ததில், அது கோபால கிருஷ்ணன் திருஉருவம் என்பது புரிந்தத. பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட புனிதமான செம்பாக அது இருக்க வேண்டும் அதை எப்படியோ குரங்கு எடுத்து வந்திருக்கிறது என்று அவர் கருதினார். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். அந்தச் செம்பை நாமும் பூசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுந்தது. வீடு சேர்ந்ததும் அதைத் தனி இடத்தில் வைத்து உரிய முறையில் தொழுது வணங்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். செம்பைக் கண்டெடுத்தவரும் அவரை சேர்ந்த்வர்களும் ராஜவல்லி புரம் கிராமத்தில் தங்கினார்கள். பந்தல்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர் களாதலால் அவர்கள் பந்தல்குடி வம்சத்தார் என்று குறிப்பிடப் படலாயினர். இயல்பாகவே தெய்வநம்பிக்கையும் பூஜைகளில் பற்றுதலும் கொண்டிருந்த அவர், தானும் தன் குடும்பமும் தங்கிய வீட்டில், தனியாக பூஜை அறை அமைத்தார். அங்கு கோபாலகிருஷ்ணன் உருவம் தீட்டிய செம்பை வைத்து வழிபடத்தொடங்கினார். முதல்நாள் இரவு அவரை உளம் சிலிர்க்கச் செய்த கனவு ஒன்று துரக்கத்தில் அவருக்குத் தோன்றியது. தவக்கோலம் பூண்ட முனிவர் ஒருவர் காட்சிதந்தார். உனக்குக் கிடைத்திருப்பது சாதாரணச் செம்பு இல்லை. சும்மா பால்கறக்க உபயோகப்படும் பாத்திரம் இல்லை அது. புனித விக்ரகம் போன்றது. தியானம் செய்து தினந்தோறும் பயபக்தி யோடு நான் பூஜித்து வந்த தெய்வ உருவம் அது நான் நீராடச் சென்றிருந்த போது, குரங்கு மடத்தினுள் புகுந்து அதை எடுத்து வந்துவிட்டது. உன் முன்னோரின் பூஜாபலத்தினாலும், உனது நற்பேறு காரணமாகவும் அது உனது பார்வையில் பட்டிருக்கிறது. உன் நல்ல காலம் நீ அதை அடைந்திருக்கிறாய். தினசரி அதை வழிபட்டு வணங்கிவா. உனக்கு நல்லதே நடக்கும். உனது வருங்காலம் வளமான தாகும் என்று அந்த முனிவர் அருள்புரிந்தார். செம்பு பெற்றவர் அவர் காலில் விழுந்து வணங்கி, அப்படியே செய்கிறேன் சுவாமி என உறுதியளித்ததும், முனிவர் மறைந்து போனார். திடுக்கிட்டுக் கண்விழித்த பெரியவருக்கு அது வெறும் சொப்பன மாகப் படவில்லை. உண்மையிலேயே முனிவர் காட்சி அளித்து நிலைபெற்ற நினைவுகள் 38 41