பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்குளத்தில், சிவன் கோயிலுக்கு வெளிப்புறத்தில், மதில்சுவரை ஒட்டி ஒரு வீடு இருந்தது. சிறிய விடுதான். தாசி விடு அது தாசி ஒருத்தி மகளுடன் அங்கு வசித்தாள். மகளுக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கலாம். ஒருநாள் அவள் மகளை அழைத்துக் கொண்டு அப்பாவை காணவந்தாள். தன் வீட்டிலிருந்த பட்டுப் புடவைகளையும் சில நகை களையும் யாரோ சிலர் திருடிச் சென்றுவிட்டார்கள். இரண்டு மூன்று பேர் செய்த காரியம் அது நீங்க தான் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று அவள் முறையிட்டாள். உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று அப்பா கேட்டார். உங்க வீட்டு வண்டிக்காரனும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்குத் தோணுது அவனை விசாரித்தால் துப்பு துலங்கும் என்று அவள் தெரிவித்தாள். மாணிக்கமா? மாணிக்கமா அப்படிச் செய்தான் என்கிறே? என்று அப்பா அழுத்திக் கேட்கவும், ஆமா. அவன் பேரிலே எனக்கு சந்தேகமிருக்கு அவன் ரெண்டு மூணு நாளா எங்கவீட்டையும் தோட்டத்தையும் நோட்டம் விட்டுத் திரிஞ்சான். அதை நான் பார்த்திருக்கேன். என்ன விசயம் என்று கேட்டேன். அவன் எதுவும் சொல்லாமப் போயிட்டான். நேத்துப் பகலிலும் அவன் அங்கே அலைஞ்சான், ராத்திரிதான் திருட்டு வேலை நடத்திருக்கு என்று அவள் கூறினாள். அப்பா வண்டிக்காரன் மாணிக்கத்தை கூப்பிட்டார். இந்த அம்மா என்னமோ சொல்லுது என்ன நடந்தது என்று சாதாரணமாகக் கேட்டார். அவன் மிரளமிரள விழித்து, எஞ்ளுமிஞ்ளுவென்று என்னவோ சொன்னான். அப்பாவுக்குக் கோபம் பொங்கியது. வேகமாக எழுந்தார். அவர் ஒரமாகக் கிடந்த சாட்டைக் கம்பை எடுத்து, மாணிக்கத்தை கண்டபடி விளாசினார். தாசியே இரக்கப்பட்டு, அய்யய்யோ, இப்படி அடிக்காதீங்க சாமி என்று கெஞ்சும் அளவுக்கு மூர்க்கமாக சாட்டையால் அறைந்து தள்ளினார் அப்பா, 5 ஐ வல்லிக்கண்ணன்