பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணனை காணோம்? இத்தனை நேரமா அவன் வெளியே வரவேயில்லையே என்று அப்பா கேட்கவும் அம்மா வீட்டுக்குள் வந்து தேடிப்பார்த்தாள். ஊஞ்சலில் கிடந்தவனைக் கண்டதும் இங்கே தான் ஊஞ்சலிலே படுத்துக் கிடக்கான் என்று சொல்லி அம்மா என்னை அணுகினாள். அந்திநேரத்திலே என்ன தூக்கம், எழுந்திரு என்று கூறி, என்னை ஊஞ்சலிலிருந்து தூக்கினாள். இடது கையில் அம்மா பிடி அழுத்தியதும் எனக்கு வலி அதிகமாயிற்று. ஓவென்று கத்தி அழுதேன். ஏன் ஒருமாதிரி இருக்கிறே? என்ன ஆயிற்று என்று பதறி அம்மா இடதுகையை நோக்கினாள். கை மூட்டின் அருகே வீங்கியிருந்தது. கையை மடக்க முயன்றாள். வலி கூடியது. அழுகையும் அதிகரித்தது. அப்பா வந்து பார்த்தார். கை வீக்கம் கண்டிருக்கு ஏதோ அடிபட்டிருக்கு என்ன நடந்தது என்று அப்பா கேட்டார். பூச்சரத்தை எடுத்து விட்டெறிந்த போது, படியில் உருண்டு விழுந்ததை சொன்னேன். இடது கைமூட்டுப்பக்கம் தொட்டாலே வலி மிகுதியாக இருந்தது. விழுந்ததிலே மூட்டு பிசகியிருக்கு என்றார் அப்பா. விழுந்த உடனேயே வந்து சொல்வதற்கென்ன? ஏன் சொல்லாமலே படுத்துக் கிடந்தே? சிவலிங்க நாடான் இத்தனை நேரமும் இருந்துவிட்டு இப்பதானே போனான்! அப்பவே அவனிடம் காட்டியிருந்தால் மூட்டுப்பிசகை சரிபண்ணியிருப்பானே என்று அப்பா எரிச்சலோடு சொன்னார். > தொடர்ந்து வேலைக்காரனை அனுப்பி நாடாரை அழைத்து வரும்படி ஏவினார். அவன் வேகமாகப் போய், பாதி வழி சென்றிருந்த சிவலிங்க நாடாரை அழைத்து வந்தான். நாடார் என் கையைப் பார்த்தார். மூட்டு எலும்பு தன் இடத்திலிருந்து விலகியிருக்குது. அதை சரிப்படுத்திடலாம் என்று கூறி, என் கையைப் பற்றி, உரிய இடத்தில் அழுத்தி, ஏதோ செய்தார். மிக வலித்தது. எலும்பிலே இலேசா முறிவு ஏற்பட்டிருக்கும் போல் தோணுது. மட்டை வச்சுக் கட்டணும் சரியாகி விடும் என்று சொன்னார். தேவை யான பொருள்களை கொண்டுவரச் செய்தார். நிலைபெற்ற நினைவுகள் 38 75