பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டை, களிப்பாக்கு நல்லெண்ணெய், மற்றும் ஏதோ சில. பனைமட்டையை சிறிதாக்கி, சிறுசிறு பட்டைகளாக வகிர்ந்து கொண்டார். துணியும் தேவைப்பட்டது. முட்டைக் கருவை ஊற்றி, களிப்பாக்கை மைபோல அறைத்து, எண்ணெய் ஊற்றி மேலும் மசித்துப் பசையாக்கினார். அதை கைமூட்டிலும் கைமீதும் நன்றாக அப்பி மட்டைகளை வைத்து, துணிகொண்டு கட்டுப் போட்டார். வலி யினால் நான் அழுதுகொண்டேயிருந்தேன். அப்பா கோபித்தார். நாயை அடிப்பானேன், பியை சுமப்பானேன்? பூவை எடுத்து ஏன் படிமேலே நின்று சுழற்றி எறியனும்? கீழே விழுந்து ஏன் அடிபடனும் விளையாட்டாக இருந்துதா அப்போ? அதுக்கு இப்ப அனுபவி என்று பேசினார். - இரண்டு மூணு நாளைக்கு ஒருக்க கட்டை அவிழ்த்து, பசையை புதுசா வச்சுக்கட்டணும் நான் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி சிவலிங்க நாடார் விடைபெற்றுச் சென்றார். மட்டை கட்டப்பெற்ற இடது கை மடித்து வைக்கப் பெற்று, கழுத்திலிருந்து தொங்கிய ஒரு துணியில் தொட்டிலிடப்பட்டிருந்தது. இந்த நிலை கை குணமாகிற வரை நீடித்தது. நாடார் அடிக்கடி வந்து கைக் கட்டை அவிழ்த்துப் பார்த்து உரிய முறையில் சிகிச்சை செய்தார். நாளடைவில் எலும்பு சேர்ந்து இணைந்து விட்டது; இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கனும் என்று சொன்னார். தொட்டில் கட்டை சிறிது சிறிதாகத் தாழ்த்தி, கையை மெதுமெதுவாகக் கீழிறக்கி, முடிவில் இயல்பாகத் தொங்கும் நிலைக்குக் கொண்டு வந்தார். அதற்கு சில மாதங்கள் பிடித்தன. முட்டையும் களிப்பாக்கும் அறைத்து மசிபோலாக்கிப் பூசுவது தொடர்ந்தது. உரிய காலத்தில் கை குணமாயிற்று. இடது கை இயல்பான தன்மைபெற்று இருப்பினும், இரண்டு கைகளையும் நீட்டி வைத்தால், இடது கை சிறிது வளைந்திருப்பது பிறர் பார்வையில் புலனாகியது. விழுந்த உடனேயே காட்டியிருந்தால், உடனடியாக எலும்பை சீர்படுத்தி யிருந்தால், பூரணமான குணம் ஏற்பட்டிருக்கும். இந்தக் குறைபாடு இருந்திருக்காது என்று நாடார் தெரிவித்தார். அது பெரிய குறைபாடாகத் தோன்றவில்லை. காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிட்டது. 75 : வல்லிக்கண்ணன்