பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராட்டினங்கள் நடுவில் நடந்து வேடிக்கை பார்த்தோம் ஆறு அகன்று பரந்த மணல்பகுதி அதிகம் கொண்டிருந்தது. கோடை நாள் ஆதலால் தண்ணிர் குறைவாகவே ஓடியது. கண் எட்டிய துரமெங்கும் மணலின் பரப்பு. இந்த மணல் பகுதியில் எச்சரிக்கையாக நடக்கவேண்டும்; தனியாக வெகு தொலைவில் போய்விடக் கூடாது. எங்கே சொரிமணல் (சொருகு மணல்) இருக்கும் என்று சொல்லமுடியாது என்று அப்பா கூறினார். சொரி மணல் (சொருகு மணல்) என்றால் என்ன என்பதையும் அப்பா விளக்கினார். இதர இடங்களில் புதை மணல் என்று சொல்லப் படுவது திருநெல்வேலி ஜில்லாவில் சொரிமணல் எனக் குறிப்பிடப் பட்டது. பார்ப்பதற்கு மணல் பரப்பு சாதாரணமாக எல்லாப் பகுதிகள் போலத்தான் இருக்கும். ஆனால் அந்த இடத்தில் யார் போனாலும் - மனிதன், ஆடு மாடு கழுதை எதுவானாலும் சொருசொரு என்று மணல் இறங்கி ஆளை அல்லது மிருகத்தை உள்ளே இழுத்து, உள்ளுக்குள்ளே சொருகிச் சாகடித்துவிடும் பயங்கரமான ஆபத்தான மணல் பகுதி அது என்று அப்பா சொன்னார். ஒரு சமயம் ஒரு கலெக்டர் துரை - வெள்ளைக்காரன் - குதிரை மேல் அமர்ந்து வந்தார். கரைப் பக்கமெல்லாம் சுற்றி விட்டு, ஆற்றைக் கடந்து அக்கரை ஊருக்குப் போகலாம் என்று மணலில் இறங்கினார். அந்த இடத்தில் சொரிமணல் இருந்தது யாருக்கும் தெரியாது. குதிரை சவாரி செய்து ஒய்யாரமாக மணலைக் கடக்க முயன்ற துரை, அங்கே வந்ததும் குதிரையோடு உள்ளே இழுக்கப்பட்டார். வேகமாக சர்ரென குதிரையும் துரையும் உள்ளே போய் விட்டார்கள். விரைவிலேயே, அவர் போன இடம் தெரியாதபடி, மணல் மூடிக்கொண்டது. அதன் அருகே போகவே இதர ஆள்கள் பயந்தார்கள். சொரிமணல் யாரையும் சாகடித்துப்போடும் என்று அப்பா விவரித்தார். இந்தக் காலத்திலும், தாமிரவர்ணி ஆற்றில், மேற்கே திருப்புடை மருதூர் என்ற இடத்தில், அழகான சிவன் கோயில் அருகே, படித்துறைப் பக்கத்தில் புதைமணல் இருப்பதாகவும், வருடத்துக்கு ஒன்றிரண்டு பேர் தெரியாத்தனமாக அதில் சிக்கி ஆழ்ந்து போய் விடுவதாகவும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்தி வருவது உண்டு குரங்கணி அம்மான் கோயில் திருவிழா முடிந்து ஜனங்கள் கூண்டு வண்டிகளில் அவரவர் ஊர் திரும்புவார்கள். வண்டிகள் வரிசையாகப் நிலைபெற்ற நினைவுகள் 38 79