பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகும் அவற்றின் கூட்டின் மீது - ஒவ்வொரு வண்டி மேலும் - குடல் வகிரப்பட்ட ஆடுகளின் எலும்புகளும் ரத்தம் சுண்டிய தோல்களும் படர்ந்து கிடப்பதைக் காணமுடியும். அந்தக் காலத்தில் அப்படி நடந்தது. காலப்போக்கில் இது மாறியிருக்கும். பஸ் போக்குவரத்து அதிகரித்தபிறகு, கூண்டு வண்டி களும் மறைந்து போயின. எந்தக் காலத்திலும் மனிதர்கள் தெய்வமாக்கப்படுவது நடந்து கொண்டு தானிருக்கிறது. நாங்கள் பெருங்குளத்தில் வசித்தபோது, ஏரலி ல் சேர்மன் கோயில் என்று ஒன்று புதிதாகத் தோன்றி பெயர்பெற்று ஒரு பெரிய நகரத்தில் முனிசிபல் சேர்மன் ஆகப் பதவி வகித்த நாடார் ஒருவர் ஒய்வு பெற்று ஏரலில் வசித்தார். சேர்மன் நாடார் என மதிப்புப் பெற்றிருந்த அவர் ஜனங்களுக்கு நன்மைகள் செய்து கொண்டிருந்தார். குறி சொல்லுவது போல் அவர் கூறியவை சிலருக்கு பலித்து வந்ததாகச் சொல்வார்கள். அவர் இறந்த பிறகு அவர் உடல் ஒரு தோட்டத்தில் சமாதிவைக்கப்பட்டது. மக்கள் பக்தியுடன் அங்கு சென்று வணங்கினார்கள். அவர்கள் வேண்டிக்கொள்வது வேண்டிய வாறு நடந்தது என்றும் அநேகருக்கு நோய் நொடிகள் தீர்ந்தன என்றும் பேச்சு பரவியது. மக்களின் நம்பிக்கை வளர்ந்தது. நாளாக ஆக சேர்மன் சமாதி சேர்மன் கோயில் என்று அந்தஸ்தைப் பெற்றது. சமாதி பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டும், விபூதி குங்குமம் பூசப்பட்டும், நம்பிக்கை கொண்ட மக்களால் போற்றி வழிபடப்பட்டது. விசேஷ திருநாள்களும் சிறப்புப் பூஜைகளும் ஏற்பட்டன. சேர்மன் இறந்த நாள் குருபூசை தினமாகத் தடபுடல் படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் அந்த நாள் திருவிழாக் கோலா கலத்தோடு கொண்டாடப் பெற்றது. அப்பா எங்கள் எல்லோரையும் அப்படிப்பட்ட ஆண்டுவிழா நாளில் சேர்மன் கோயிலுக்கு அழைத்துப் போனார். கூட்டம் அதிகம் தான். வழக்கமான கடைகள் மிகுதியாகக் காணப்பட்டன. திருச்செந்தூர் கோயிலுக்கும் ஒருமுறை எங்களை அழைத்துப் போனார் அப்பா. தம்பிக்கு முடி இறக்கி, காது குத்துகிற விசேடத்தை நடத்துவதற்காக அவனுக்கு மூன்று வயது நிறைந்திருந்த சமயம் 80 வல்லிக்கண்ணன்